பிக்பாஸ் சீசன் 5...இவங்க தான் 10 வது வாரத்தில் நாமினேட் ஆனவர்கள்
சென்னை : தமிழ் தொலைக்காட்சிகளிலேயே மிக பிரபலமான ரியாலிட்டி ஷோவாக மாறி உள்ளது பிக்பாஸ். உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது இந்த ஷோ.
தமிழில் நான்கு சீசன்களை கடந்துள்ள பிக்பாஸ் ஷோ, தற்போது ஐந்தாவது சீசனும் 60 நாட்களை கடந்துள்ளது. கடந்த சீசன்களை விடவும் அதிக சண்டைகள், மோதல்களுடன் இந்த சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

வெளியேற்றப்பட்ட அபிஷேக்
18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் இதுவரை 9 வாரங்கள் நிறைவடைந்துள்ளது. 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய இருவரும் வைல்ட்கார்டு என்ட்ரியாக வந்துள்ளனர். கடந்த வாரம் ஐக்கி பெர்ரி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்டுள்ளார்.

தலைவரான பாவ்னி
இந்த வார கேப்டனை தேர்வு செய்வதற்கான போட்டி நேற்று நடைபெற்றது. பல ட்விஸ்ட்களுடன் நடைபெற்ற இந்த போட்டியில் இறுதி வரை போட்டியிட்டு, அமீர் வெற்றி பெற்றார். ஆனால் தன்னிடம் உள்ள காயினுக்கான சலுகையை பயன்படுத்தி பாவ்னி இந்த வார கேப்டனாகி உள்ளார்.

நாமினேட் ஆன 7 பேர்
இந்நிலையில் தற்போது நடந்து வரும் பத்தாவது வாரத்தில், வெளியேற போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேற்று நடைபெற்ற நாமினேஷனில் ஒவ்வொரு போட்டியாளரும் தலா மூன்று போட்டியாளர்களை நாமினேட் செய்ய வேண்டும் என பிக்பாஸ் கூறி இருந்தார். நாமினேஷன் முடிவில் மொத்தம் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

காயினை பயன்படுத்திய நிரூப்
நாமினேஷன் இறுதியில் இமான் அண்ணாச்சி, சிபி, தாமரை, நிரூப், அபினய், அக்ஷரா, அமீர் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் நிரூப், அக்ஷரா, இமான் அண்ணாச்சி ஆகியோரை நாமினேட் செய்திருந்தனர். நிரூப் தன்னிடம் உள்ள காயின் பவரை பயன்படுத்தி சஞ்சீவை நாமினேட் செய்தார்.

சிக்கிக் கொண்ட நிரூப்
நிரூப் மற்றும் சஞ்சீவ்விற்கு நடத்தப்பட்ட போட்டியில் நிரூப் வெற்றி பெற்றால் நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என பிக்பாஸ் சொல்கிறார். ஆனால் நிரூப் தோல்வி அடைந்ததால், அவர் நாமினேஷனில் தொடர்வார் என பிக்பாஸ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











