அவதார் கான்செப்ட்டில் இந்த வாரம் பிக் பாஸ் டாஸ்க்… ஏலியன்ஸ்களாக மாறிய ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: கடந்த மாதம் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றோடு 50வது நாளை நிறைவு செய்கிறது.

இந்த வாரமும் போட்டியாளர்கள் இடையே ஓப்பனாக எவிக்சன் நாமினேஷன் நடந்து முடிந்துவிட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த வாரம் ஹவுஸ் மேட்ஸ் என்ன விளையாடப் போகிறார்கள் என்பதை பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

வெற்றிகரமான 50வது நாள்

வெற்றிகரமான 50வது நாள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் அகம் டிவி ஹவுஸ் மேட்ஸ்களிடம் பேசினார் கமல். அப்போது குரூப்பிசம் செய்யும் போட்டியாளர்கள், Safe Game ஆடுபவர்களை வார்னிங் செய்து, சில பல பஞ்சாயத்துகளையும் முடித்து வைத்தார். இறுதியாக ராபர்ட் மாஸ்டரை எவிக்சன் செய்து வீட்டுக்கும் அனுப்பி வைத்தார். கொஞ்சம் காரசாரமாக போன விவாதங்களுக்கு முடிவு கட்டும் விதமாக, பிக் பாஸ் 50வது நாளுக்கான கேக் அனுப்பி போட்டியாளர்களை சந்தோஷப்படுத்தினார். அதோடு நேற்று முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இன்று மீண்டும் எவிக்சன் நாமினேஷன், இந்த வாரம் டாஸ்க் என களைக்கட்டியுள்ளது.

நாமினேஷன் ஓவர்

நாமினேஷன் ஓவர்

50வது தினமான இன்று முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. அதன்படி இந்த வாரமும் ஓப்பன் நாமினேஷன் நடந்துள்ளது. அதிகமான போட்டியாளர்கள் குயின்ஸி, ரச்சிதாவை நாமினேட் செய்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் எடிகே தனலட்சிமியை நாமினேட் செய்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. மேலும், கதிர், ஜனனி, ஆயிஷா, ராம் ஆகியோரும் இந்த வாரம் எவிக்சன் நாமினேஷனில் இடம்பிடித்துள்ளதாகவே தெரிகிறது.

இந்த வார டாஸ்க்

இந்த வார டாஸ்க்

முதல் இரண்டு ப்ரோமோக்களை தொடர்ந்து மூன்றாவது ப்ரோமோவும் தற்போது வெளியாகியுள்ளது. சென்ற வாரம் போட்டியாளர்களுக்கு நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதேபோல், இந்த வாரம் அவதார் படத்தின் கான்செப்ட்டை மையமாக வைத்து ஏலியன்ஸ் Vs பழங்குடியின மக்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டியாளர்கள் மோதவுள்ளனர். அதாவது பழங்குடியின மக்களிடம் இருக்கும் அதிசய கற்களை ஏலியன்ஸ் திருட வருவதும், அவர்களிடம் இருந்து தங்களின் வளங்களை காப்பாற்றுவதும் தான் இந்த வார டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது.

ஏலியன்ஸாக மாறும் ஹவுஸ்மேட்ஸ்

ஏலியன்ஸாக மாறும் ஹவுஸ்மேட்ஸ்

மொத்தம் 21 பேர் பங்கேற்ற பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் இதுவரை 7 பேர் வெளியேறிவிட்டனர். அதனால் எஞ்சியுள்ள 14 பேரும் இரண்டு பிரிவுகளாக பிரிந்து இந்த டாஸ்க்கில் விளையாட உள்ளனர். முக்கியமாக ஏலியன்ஸ் வேடம் போட்டு எந்த போட்டியாளர்கள் எல்லாம் விளையாடப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும். அதேபோல், இரண்டு அணிகளுக்கும் யார் கேப்டனாக இருக்கப் போகிறார்கள் என்பதும் ரசிகர்களிடம் எதிர்பார்க்க வைத்துள்ளது. மேலும், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் என்பதும் இன்று இரவு தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X