»   »  ஈஸ்டர் ஸ்பெஷல் கொம்பன், நண்பேன்டா, சகாப்தம், ஃபாஸ்ட் & ப்யூரியஸ் 7... பாத்துட்டீங்களா?

ஈஸ்டர் ஸ்பெஷல் கொம்பன், நண்பேன்டா, சகாப்தம், ஃபாஸ்ட் & ப்யூரியஸ் 7... பாத்துட்டீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வாரம் மூன்று முக்கியமான படங்கள் வெளியாகியுள்ளன. அவை கொம்பன், நண்பேன்டா மற்றும் சகாப்தம்.

5 படங்கள் வெளியாகும் என முதலில் அறிவித்திருந்தனர். கடைசி நேரத்தில் இரு படங்கள் பின்வாங்கிவிட்டன.


இந்த மூன்றுமே ஒருவித எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிய படங்கள்தான்.


கொம்பன்

கொம்பன்

கடந்த ஒரு வார காலமாக மீடியாவை ஆக்கிரமித்துவிட்டது கொம்பன் என்றுகூடச் சொல்லலாம். அத்தனை எதிர்ப்பு - ஆதரவு செய்திகள், அறிக்கைகள், போராட்டங்கள், வழக்கு வாதங்கள்.


அனைத்தையும் கடந்து நேற்றே வெளியாகிவிட்டது கொம்பன். கார்த்தி - லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடித்துள்ள இந்தப் படத்தை முத்தையா இயக்கியுள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
நண்பேன்டா

நண்பேன்டா

உதயநிதி, சந்தானம், நயன்தாரா நடித்துள்ள நண்பேன்டா முழுக்க முழுக்க காமெடிப் படம். பெரிய அளவில் வசூலை எதிர்ப்பார்க்கிறார்கள் இந்தப் படத்துக்கு. ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.


சகாப்தம்

சகாப்தம்

விஜயகாந்த் மகன் நடித்துள்ள சகாப்தம் இன்று வெளியாகியுள்ளது. தன் மகனை நாயகனாக அறிமுகப்படுத்தும் படம் என்பதால், தானே முன்நின்று பட வேலைகளை கவனித்து வந்தார் விஜயகாந்த். எனவே படம் எப்படி இருக்கும் என அவரது ரசிகர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் ரொம்பவே எதிர்ப்பார்த்துள்ளனர்.


போன மாதம் வெளியான 31 படங்கள்...

போன மாதம் வெளியான 31 படங்கள்...

போன மார்ச் மாதத்தில் மட்டும் 31 படங்கள் வெளியாகின. இந்தப் படங்களில் எதுவும் தேறவில்லை என்பதுதான் சோகம். ராஜதந்திரம் மட்டும் தப்பித்ததாக பேச்சு.


ஃபாஸ்ட் ப்யூரியஸ் 7

ஃபாஸ்ட் ப்யூரியஸ் 7

ஹாலிவுட் மெகா படமான ஃபாஸ்ட் & ப்யூரியஸ் 7, கிட்டத்தட்ட ஒரு நேரடி தமிழ்ப் படத்துக்கு இணையாக ஏராளமான அரங்குகளில் இன்று வெளியாகிறது.
English summary
There are 3 direct Tamil movies Komban, Nanbenda and Sagaptham releasing this week. Hollywood biggie Fast & Furious also releasing in 200 plus screens in Tamil Nadu.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil