twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லத்தி, கனெக்ட் பாக்ஸ் ஆபிஸ்: காத்து வாங்கும் தியேட்டர்கள்... முடிவுக்கு வருகிறதா நயனின் மார்க்கெட்?

    |

    சென்னை: விஷாலின் லத்தி, நயன்தாராவின் கனெக்ட் திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாகியுள்ளன.
    லத்தி, கனெக்ட் படங்களுக்கு முதல் நாளில் இருந்தே எதிர்பார்த்த ஓப்பனிங் கிடைக்காமல் தடுமாறி வருகிறது.

    அதேபோல், இந்தியில் ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே நடித்துள்ள சர்க்கஸ் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் முதல் நாளில் ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     லத்தி பாக்ஸ் ஆபிஸ்

    லத்தி பாக்ஸ் ஆபிஸ்

    விஷாலின் லத்தி திரைப்படம் ஒருவழியாக நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. வினோத் குமார் இயக்கியுள்ள இந்தப் படம், ஏற்கனவே செப்டம்பரில் வெளியாகவிருந்து ரிலீஸ் தேதி தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது. விஷால் போலீஸாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ஓவர் டோஸ் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, ரசிகர்களிடம் எதிர்பார்த்து வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் நாளில் கூட சுமாரான ஓப்பனிங் தான் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்தப் படம் முதல் நாளில் 2 கோடி வரை மட்டுமே வசூலித்தது.

     காத்து வாங்கிய தியேட்டர்கள்

    காத்து வாங்கிய தியேட்டர்கள்

    விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது. ஆனாலும் எந்தப் பக்கமும் லத்தி படத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக லத்தி ஓடும் தியேட்டர்களில் கூட்டமே இல்லாமல் காத்து வாங்குவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆக்‌ஷன் சீன்ஸ் எல்லாம் நம்பும்படியாக இல்லையென்றும் அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படம் இரண்டாவது நாளில் 1.5 முதல் 2 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லத்தி 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

     கனெக்ட் பாக்ஸ் ஆபிஸ்

    கனெக்ட் பாக்ஸ் ஆபிஸ்

    அதேபோல் நயன் நடித்துள்ள கனெக்ட் திரைப்படமும் இந்த வாரம் வெளியானது. நயன் லீடிங் ரோலில் நடித்துள்ளதால் அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், வழக்கமான பேய் படம் கான்செப்ட்டில் உருவாகியுள்ள கனெக்ட், ரசிகர்களிடம் சுத்தமாக கனெக்ட் ஆகவில்லை. இந்தப் படத்திற்கு அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளன. இதனால் கடுப்பான விக்னேஷ் சிவன், "நயன் நடித்துள்ள கனெக்ட் படத்திற்கு வன்மம் நிறைந்த பேக் ரிவியூக்கள் வருகிறது" என புலம்பித் தீர்த்திருந்தார். இந்நிலையில், இந்தப் படம் முதல் நாளில் 1.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. இரண்டாவது நாளிலும் 1 கோடி ரூபாய் மட்டும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் முதல் இரண்டு நாட்களில் மொத்தம் 2.5 முதல் 3 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாம் கனெக்ட்.

     சர்க்கஸ் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

    சர்க்கஸ் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

    இந்நிலையில், இந்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'சர்க்கஸ்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ், வருண் சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காமெடி ஜானரில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள சர்க்கஸ், முதல் நாளில் 15 கோடி வரை வசூலித்துள்ளது. பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் இது நல்ல வசூல் என்றே சொல்லப்படுகிறது. மேலும், இன்னும் ஒருவாரத்தில் 50 கோடி ரூபாய் வரை வசூலிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறதாம். கடந்த சில மாதங்களாக இந்தி திரைப்படங்கள் பாய்காட் செய்யப்பட்டு வந்த நிலையில், பிரம்மாஸ்த்திரம் படத்துக்குப் பிறகு, சர்க்கஸ் கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்துள்ளதாக இந்தி திரைப்பட விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

    English summary
    Vishal's Laththi and Nayanthara's Connect are hitting theaters this week in Tamil. These films are Laththi and Connect expected to perform well on their Second day at the box office. Here is the second day box office collection and Occupancy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X