Don't Miss!
- News
"காலி எடப்பாடி".. என்ன கம்பு சுத்தினாலும், அண்ணாமலைக்கு 5000 வாக்குகூட தேறாது.. சொல்றது யார் யாருங்க
- Lifestyle
ஆண்கள் மனைவியை தவிர்த்து வேறு பெண்ணை விரும்ப சாணக்கியர் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?
- Automobiles
கொள்ளை அழகு... இந்த கார்கள் மட்டும் சாலைக்கு வந்துச்சு எல்லோரட கண்களும் அது மேலதான் இருக்கும்...
- Sports
காவ்யா மாறன் அழகில் மயங்கிய வெளிநாட்டு ஆண்கள்.. கல்யாணம் பண்ணிக்குங்க என கெஞ்சல்.. வீடியோ
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Technology
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
வசூலில் டல்லடிக்கும் லத்தி, கனெக்ட்... புலம்பும் விஷால், நயன்: இதுவும் தேவையில்லாத ஆணிதானா?
சென்னை:
கிறிஸ்துமஸ்,
நியூ
இயர்
விடுமுறைகளை
முன்னிட்டு
விஷாலின்
லத்தி,
நயன்தாராவின்
கனெக்ட்
திரைப்படங்கள்
இந்த
வாரம்
வெளியாகியுள்ளன.
விஷாலின்
லத்தி
தமிழ்,
தெலுங்கு
என
இரண்டு
மொழிகளிலும்
வெளியாகியுள்ள
குறிப்பிடத்தக்கது.
விஷாலுக்கு
கம்பேக்
கொடுக்கும்
என
எதிர்பார்க்கப்பட்ட
லத்தியும்,
நயன்தாராவின்
கனெக்ட்
திரைப்படமும்
கலவையான
விமர்சனங்களையே
பெற்றுள்ளன.
இந்நிலையில்,
அதிகம்
எதிர்பார்க்கப்பட்ட
விஷாலின்
லத்தி,
நயனின்
கனெக்ட்
திரைப்படங்களின்
முதல்
நாள்
வசூல்
குறித்து
தகவல்கள்
வெளியாகியுள்ளன.
லத்தி
விமர்சனம்:
ஆக்ஷன்
மட்டுமே
போதுமா?
விஷால்
கையில்
எடுத்த
லத்தி
வெற்றியை
கொடுத்ததா?

எதிர்பார்ப்பில் இருந்த விஷால்
விஷாலின் லத்தி திரைப்படம் ஏற்கனவே ஒருமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போய் தற்போது வெளியாகியுள்ளது. வினோத் குமார் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். விஷால் போலீஸாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் - யுவன் கூட்டணியில் உருவாகும் 15வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் போலீஷாக நடிக்க ஆக்ஷன் ஜானரில் உருவான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. விஷாலும் தனக்கு இது ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

முதல் நாள் வசூல்
ஆனால், லத்தி திரைப்படம் விஷாலின் எதிர்பார்ப்பை பொய்யாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ள இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டில் 400 திரையரங்குகளிலும், ஆந்திரா, தெலங்கானாவில் 350 திரைகளில் இந்தப் படம் ரிலீஸானது. ஆனால், விமர்சனங்கள் வெளியாகும் முன்பே ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாமல் போயுள்ளது லத்தி. தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்களில் டிக்கெட் புக்கிங்கே இல்லையெனவும், மிகவும் மந்தமாக நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், மொத்தமே 2 கோடி ரூபாய்க்கு உள்ளாகவே வசூல் செய்துள்ளதாம் லத்தி. இது விஷாலின் படத்துக்கு மிக மோசமான ஓப்பனிங் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹாரர் ஜானரில் கனெக்ட்
அதேபோல் நயன் நடித்துள்ள கனெக்ட் திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இண்டர்வெல் பிரேக் இல்லாமல் ரிலீஸாகவிருந்த இந்தப் படம், தியேட்டர் உரிமையாளர்களின் வற்புறுத்தலால் இடைவேளையுடன் வெளியானது. இப்போது அதுவே படத்திற்கு சோதனையாக அமைந்துள்ளதாம். முதல் பாதியில் வேறு வழியே இல்லாமல் தியேட்டரில் இருந்த ரசிகர்கள், இடவேளைக்குப் பிறகு திரும்ப உள்ளே வரவில்லையாம். ஹாரர் ஜானர் திரைப்படமாக இருந்தாலும் முழுமையாக பார்க்க முடியாமல் பாதியிலேயே ரசிகர்கள் வெளியேறுவதாக சொல்லப்படுகிறது.

ஏமாற்றத்தில் நயன் - விக்கி
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயனுடன் சத்யராஜ், வினய், அனுபம் கெர், பேபி ஹனியா நபிஸா ஆகியோர் கனெக்ட் படத்தில் நடித்துள்ளனர். அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள கனெக்ட், 2020 கொரோனா ஊரடங்கின் போது நயன்தாராவின் வீட்டில் நடக்கும் சில திகிலான அனுபவங்களின் பின்னணியில் உருவாகியுள்ளது. தனது சொந்த தயாரிப்பு என்பதற்காக நயன்தாராவே நேரடியாக ப்ரோமோஷனில் கலந்துகொண்டார். ஆனாலும் கனெட் திரைப்படம் ரசிகர்களிடம் கனெக்ட் ஆகவில்லை என்றே சொல்லப்படுகிறது. முதல் நாளில் கூட ஓப்பனிங் இல்லாமல் தடுமாறும் கனெக்ட், 1.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம். இதனால் நயன் - விக்கி தம்பதி செம்ம அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.