Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸில் கலக்க வரும் கோலிவுட் ஹீரோயின்கள்... என்னென்ன படங்கள் ரிலீஸ்ன்னு பாருங்க
சென்னை: 2022ம் ஆண்டில் தமிழில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருந்தன.
இந்தாண்டின் இறுதியில் எந்தெந்த நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
அதன்படி இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகின்றன, அதில் ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பில் உள்ள படம் எது என இப்போது பார்க்கலாம்.
இதில் முக்கியமாக இந்த வாரம் வெளியாகும் நான்கு படங்களுமே நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவதார்
2
தமிழில்
வெளியாவதில்
திடீர்
சிக்கல்…
அதிருப்தியில்
ஹாலிவுட்
ரசிகர்கள்!

த்ரிஷாவின் ராங்கி
திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் த்ரிஷா. முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்துவிட்ட த்ரிஷா, இந்தாண்டு ரிலீஸான பொன்னியின் செல்வன் படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். அதனால், அடுத்தடுத்து த்ரிஷா நடிக்கும் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வரிசையில் த்ரிஷா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள ராங்கி, வரும் 30ம் தேதி ரிலீஸாகிறது. எங்கேயும் எப்போதும் படம் மூலம் கவனம் ஈர்த்த சரவணன், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் த்ரிஷா ஜார்னலிஸ்டாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற வாரம் நயன்தாராவின் கனெக்ட் திரைப்படம் ரிலீஸான நிலையில், இந்த வாரம் த்ரிஷாவும் தனியாக களமிறங்குகிறார்.

டிரைவர் ஜமுனா
அதேபோல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா' திரைப்படமும் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் லீடிங் கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படத்தை கின்ஸ்லி இயக்கியுள்ளார். ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர், ஸ்நீக் பீக் காட்சிகள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், டிரைவர் ஜமுனா படம் பாக்ஸ் ஆபிஸில் சக்சஸ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படம் இந்த வாரம் வெளியாகவிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபு சாலமனின் செம்பி
இந்த வரிசையில் கோவை சரளா நடித்துள்ள செம்பி படத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புள்ளது. பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்தப் படமும் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மைனா, கும்கி என யதார்த்தமான படங்கள் மூலம் பிரபலமான பிரபு சாலமன் இந்தப் படத்தை இயக்கியுள்ளதால், செம்பிக்கு வரவேற்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. கோவை சரளா முதன்மையான கேரக்டரில் நடிக்க, அவருடன் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். வழக்கமாக பிரபு சாலமன் படங்களின் பலமாக பார்க்கப்படும் இசையமைப்பாளர் டி இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கவில்லை. நிவாஸ் கே பிரசன்னா பிரபு சாலமனுடன் இணைந்துள்ளார். செம்பி படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சன்னி லியோனின் OMG
இந்த வாரம் சன்னி லியோன் நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்' திரைப்படமும் வெளியாகிறது. வரும் 30ம் தேதி ரிலீஸாகும் இந்தப் படத்தில் சன்னி லியோனுடன் சதீஷ், யோகி பாபு, ஜிபி முத்து, மொட்டை ராஜேந்திரன் என பெரிய காமெடிப் பட்டாளமே இணைந்துள்ளது. காமெடி ப்ளஸ் பேண்டசி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை யுவன் இயக்கியுள்ளார். பான் இந்தியா படமாக ரிலீஸாகும் OMG, சன்னி லியோன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என சொல்லப்படுகிறது. ஆண்டின் இறுதி வாரத்தில் ரிலீஸாகும் நான்கு திரைப்படங்களுமே நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.