Don't Miss!
- News
"பிஜேபி B டீம்".. நாம் தமிழர் கட்சி "மேனகா"வின் கணவர் பாஜக நிர்வாகியா.. நவநீதன் ஆவேச மறுப்பு.. பரபர
- Technology
ரூ.16,000-க்கு கீழ் அசத்தலான 40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க விருப்பமா? இதோ பட்டியல்.!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: வருமான வரி குறைப்பால் எவ்வளவு பணம் மிச்சம்..!
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Automobiles
இதுகளோட வருகைக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம்! டூவீலர் லவ்வர்ஸ்க்கு இந்த மாசம் செம்ம தீனி காத்திட்டு இருக்கு
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் லத்தி, கனெக்ட்... ரசிகர்கள் எதிர்பார்க்கும் படம் இதுதானா?
சென்னை: கிறிஸ்துமஸ், நியூ இயர் விடுமுறைகளை முன்னிட்டு புதிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் இருந்து சில முக்கியமான திரைப்படங்கள் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகின்றன. அதன்படி எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகின்றன, அதில் ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பில் உள்ள படம் எது என இப்போது பார்க்கலாம்.
விஜய் சேதுபதி படத்துக்கு வந்த சிக்கல்… கிறிஸ்துமஸ் ரிலீஸில் இருந்து கோடை விடுமுறைக்கு போனது ஏன்?

விஷாலின் லத்தி
வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், தமிழில் புதிய படங்கள் வெளியாகவுள்ளன. அதில் விஷாலின் லத்தி முதலிடத்தில் உள்ளது. வினோத் குமார் இயக்கத்தில் விஷால் போலீஸாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் ஜோடியாக சுனைனா நடிக்க, ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது லத்தி. ஏற்கனவே செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், சில காரணங்களால் தள்ளிப் போனது. இதனையடுத்து தற்போது நாளை (டிச 22) லத்தி திரைப்படம் வெளியாகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள லத்தி, விஷாலுக்கு கம்பேக் கொடுக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நயன்தாராவின் கனெக்ட்
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள கனெக்ட், ஹாரர் ஜானர் படமாக உருவாகியுள்ளதாம். நயனுடன் சத்யராஜ், வினய், அனுபம் கெர், பேபி ஹனியா நபிஸா ஆகியோர் நடித்துள்ளனர். அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள கனெக்ட், 2020 கொரோனா ஊரடங்கின் போது நயன்தாராவின் வீட்டில் நடக்கும் சில திகிலான அனுபவங்களின் பின்னணியில் உருவாகியுள்ளதாம். நயன் ரசிகர்களிடம் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தாலும், இதுவரை வெளியான விமர்சனங்கள் பாசிட்டிவாக இல்லை என்பதே உண்மை. கனெக்ட் திரைப்படம் நாளை 22ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

பாலிவுட் ரசிகர்களுக்கு சர்க்கஸ்
பாலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 'சர்க்கஸ்' திரைப்படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக 23ம் தெதி வெளியாகிறது. ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படதை ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார். காமெடி ஜானரில் உருவாகியுள்ள சர்க்கஸ் திரைப்படம், வில்லியம் ஷேக்ஸ்பியரின் 'தி காமெடி ஆஃப் எரர்ஸ்' என்கிற நகைச்சுவை நாடகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஜானி லெவர், வருண் சர்மா, சஞ்சய் மிஸ்ரா போன்ற நட்சத்திர நடிகர்களும் இதில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். சர்க்கஸ் படத்துக்கு ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு இருப்பதால், பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய கலெக்ஷன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாளம், தெலுங்கு வரவுகள்
அதேபோல் மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள கப்பா திரைப்படம் 22ம் தேதியான நாளை வெளியாகிறது. மல்லுவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தை ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். பிருத்விராஜுடன் ஆசிப் அலி, அன்னா பென் அபர்ணா பாலமுரளி, திலீஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப்படம், மல்லுவுட் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என சொல்லப்படுகிறது. தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் 'தமாக்கா' திரைப்படம் 23ம் தேதி வெளியாகிறது. டோலிவுட் ரசிகர்களுக்கான கமர்சியல் காக்டெயிலாக இந்தப் படம் இருக்கும் என்பதால், வசூலுக்கும் குறைவிருக்காது. மேலும், தெலுங்கில் நிகில் சித்தார்த், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள 18 பேஜஸ் திரைப்படமும் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.