தளபதி 66 இரண்டாவது ஹீரோயின் இவர் தான்...ராஷ்மிகாவிற்கு போட்டியாக களமிறங்க போகும் ப்யூட்டி
சென்னை : விஜய்யின் தளபதி 66 படத்தில் நடிப்பவர்கள் பற்றிய அப்டேட்களை அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது படக்குழு. இதில் லேட்டஸ்டாக இரண்டாவது ஹீரோயின் யார் என்பது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கில் முன்னணி டைரக்டரான வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். தில் ராஜு, ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். குடும்ப சென்டிமென்ட் படமாக இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தளபதி 66 டீம் இதுதான்
கடந்த ஒரு மாதமாக ஐதராபாத் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் தளபதி 66 படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், பிரபு, யோகிபாபு, ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, பிக்பாஸ் சம்யுக்தா, சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பதாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது.

6 பாடல்கள் ரெடி
இதுவரை வெளியான தகவல்களின் படி, சரத்குமார் விஜய்யின் அப்பாவாகவும், ஜெயசுதா அம்மாவாகவும் ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் அண்ணன்களாகவும் நடிக்கிறார்கள். தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் உண்டு. இதில் ஒன்று சென்டிமென்ட் பாடல். பாடல் இசையின் பெரும்பாலான வேலைகள் தமன் ஏற்கனவே மடித்து விட்டார். இதுவரை பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் தான் சீன்கள் எடுக்கப்படும் என கூறப்பட்டது.

ஜுன் 21 ல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜுன் 21 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும், படத்தை 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் விஜய்யின் லேட்டஸ்ட் லுக் போட்டோ நேற்று வெளியாகி செம டிரெண்டானது.

யார் அந்த இரண்டாவது ஹீரோயின்
தளபதி 66 படத்தின் 6 பாடல்களுக்கும் தமன் இசையமைத்து முடித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் இரண்டாவது ஹீரோயினும் இருக்கிறார். அவர் பற்றிய தகவல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் தளபதி 66 ஹீரோயின் யார் என்பதற்கு சொல்லப்பட்டதை போல் இரண்டாவது ஹீரோயின் யார் என்பதற்கும் பல நடிகைகளின் பெயர்கள் சொல்லப்பட்டன.

அட இவர் தானா அது
பூஜா ஹெக்டே, திஷா பதானி என பான் இந்தியா நடிகைகள் பலரின் பெயர்கள் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகை மெஹ்ரின் பிர்சோடா தான் தளபதி 66 படத்தில் இரண்டாவது ஹீரோயின் ரோலில் நடிக்க போகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், தனுஷின் பட்டாஸ் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான். தற்போது தெலுங்கு, இந்தியில் பிரபலமான நடிகையாகி விட்டதால் தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











