தலைவர் 169 ல் அந்த நடிகையா?...அப்போ கதை பற்றி லீக்கான அந்த தகவல் உண்மை தானா?

சென்னை : ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 ல் அந்த இளம் நடிகை முக்கிய கேரக்டரில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஏற்கனவே சொல்லப்பட்ட கதை பற்றிய தகவல் உண்மை தான் என்பது உறுதியாகி விட்டது.

ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்க போகிறார் என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவிற்கு முக்கிய ரோல் இருப்பதாகவும் கூறப்பட்டது.

தலைவர் 169ல் டாப் ஹீரோக்கள்

தலைவர் 169ல் டாப் ஹீரோக்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களில் பாடல் எழுதியதை போலவே தலைவர் 169 படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவார் என கூறப்படுகிறது. அதோடு நடிக்கவும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு இந்த படத்தில் ஒரு பாடல் பாட உள்ளாரா அல்லது நடிக்க உள்ளாரா என தெரியவில்லை.

இந்த நடிகையும் நடிக்கிறாரா

இந்த நடிகையும் நடிக்கிறாரா

லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்தில் இளம் தமிழ் நடிகையான பிரியங்கா அருள்மோகனும் நடிக்கிறாராம். இவர் ரஜினியின் மகளாக நடிக்க உள்ளாராம். கோலிவுட் வட்டாரத்தில் தற்போது டிரெண்டிங் பேச்சே இது தான். பிரியங்கா இதற்கு முன் நெல்சன் திலீப்குமாரின் பிளாக்பஸ்டர் படமான டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி செம ஹிட்டாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் டைரக்டர் பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அப்போ இதுதான் கதையா

அப்போ இதுதான் கதையா

அண்ணாத்த படத்தில் அண்ணன்-தங்கை சென்டிமென்ட் போல் தலைவர் 169 படத்தில் அப்பா- மகள் சென்டிமென்ட் காட்சிகள் உள்ளது இதன் மூலம் உறுதியாகி விட்டது. தர்பார் படத்திற்கு பிறகு தலைவர் 169 ல் அப்பா பாசத்தை காட்டி நடிக்க போகிறாராம் சூப்பர் ஸ்டார். தர்பார், காலா படங்களை இணைத்ததை தான் தலைவர் 169 படத்தின் கதை ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது. தற்போது ரஜினியின் மகளாக பிரியங்கா நடிக்க உள்ளதாக கூறப்படுவதால் அது உண்மை தானோ என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

தலைவர் 169 எப்போ ஆரம்பம்

தலைவர் 169 எப்போ ஆரம்பம்

தலைவர் 169 படத்தின் ஷுட்டிங் பூஜையுடன் ஏப்ரல் 14 ம் தேதி துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாத்த படத்தில் கிராமத்து தலைவராக வேட்டி சட்டையில் வந்த ரஜினி, இந்த படத்தில் மீண்டும் கோட் சூட்டில் அசத்துவார் என்பதை படத்தின் அறிவிப்பிற்காக வெளியிட்ட வீடியோவிலேயே உறுதி செய்து விட்டனர். இதிலும் வயதான கேரக்டரில் தான் தலைவர் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X