»   »  இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியான தொடரி, ஆண்டவன் கட்டளை

இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியான தொடரி, ஆண்டவன் கட்டளை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் நடித்த தொடரி, விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை ஆகிய படங்கள் வெளியான கையோடு இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளன.

ஒரு படத்தை எடுத்து வெளியிடுவதற்குள் படக்குழுவினர் படாதபாடு படுகிறார்கள். இந்நிலையில் படம் வெளியாகும் அன்றே திருட்டு வி.சி.டி. மற்றும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக படம் வெளியாகிவிடுகிறது.


Thodari, Aandavan Kattalai leaked online

இதனால் திரையுலகினர் கவலையில் உள்ளனர். திருட்டு வி.சி.டி.க்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியுள்ள போதிலும் இணையதளங்களில் படங்கள் திருட்டுத்தனமாக வெளியாவதை தடுக்க முடியவில்லை.


இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வெளியான தனுஷின் தொடரி, வெள்ளிக்கிழமை வெளியான விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்கள் வெள்ளிக்கிழமையே இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டன. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இது குறித்து விஷால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


டியர் தனுஷ் மற்றும் ரசிகர்களே. தொடரி ஆன்லைனில் வெளியானது பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதற்கு எதிராக குரல் கொடுத்து புகார் அளியுங்கள் என தெரிவித்துள்ளார்.English summary
Dhanush's Thodari and Vijay Sethupathi's Aandavan Kattalai have got leaked on internet to the shock of the concerned teams.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos