»   »  வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... தொடரி Vs ஆண்டவன் கட்டளை!

வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... தொடரி Vs ஆண்டவன் கட்டளை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வாரம் இரண்டு, சற்று பெரிய படங்கள் வெளியாகியுள்ளன. ஒன்று தனுஷ் - கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி.

அடுத்தது இன்று வெளியாகியுள்ள விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை.


தொடரி

தொடரி

பிரபு சாலமன் இயக்கியுள்ள தொடரி படம் நேற்றே வெளியாகிவிட்டது. மூன்று நாள் ஓபனிங் என்பது, நான்கு நாட்களாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒரு நாள் முன்கூட்டியே வெளியிட்டுப் பார்த்தனர்.


மோசமான ஆரம்பம்

மோசமான ஆரம்பம்

ஆனால் முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆட்களில்லை என்ற மோசமான பேச்சுடன் தொடங்கியது தொடரி. அடுத்த காட்சி தொடங்குவதற்குள் படம் குறித்த எதிர்மறைப் பேச்சுகள், சமூக வலைத்தள விமர்சனங்கள் பரவிவிட்டன.


ஆண்டவன் கட்டளை

ஆண்டவன் கட்டளை

காக்கா முட்டை, குற்றமே தண்டனை படங்களின் இயக்குநர் மணிகண்டன், வித்தியாசமான படங்களை தொடர்ந்து தரும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ஆண்டவன் கட்டளை படம் இன்று வெளியாகியுள்ளது.


எதிர்ப்பார்ப்பு

எதிர்ப்பார்ப்பு

நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை என வரிசையாக வெற்றிப் படங்கள் தந்துள்ள விஜய் சேதுபதி படம் என்பதால், ஆண்டவன் கட்டளைக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளது. படம் எப்படி என்பது இன்று பிற்பகலுக்குள் தெரிந்துவிடும்.


இந்த வாரம் இந்த இரண்டே படங்கள்தான். வேறு படங்கள் இல்லாததால், விக்ரமின் இருமுகன் இன்னமும் பல அரங்குகளில் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது.English summary
There are two direct Tamil movies Thodari and Aandavan Kattalai releasing worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil