»   »  தனுஷ் - கீர்த்தி சுரேசின் தொடரி செப்டம்பர் 2ல் ரிலீஸ்

தனுஷ் - கீர்த்தி சுரேசின் தொடரி செப்டம்பர் 2ல் ரிலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தொடரி திரைப்படம் செப்டம்பர் 2ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்து கடைசியாக வெளிவந்த தங்கமகன் படம் தனுஷூக்கு ஒரு பெரிய தோல்வி படமாக இருந்தது. தற்போது ஒரு வெற்றி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் தனுஷ் இருக்கிறார்.

தனுஷ் அதிகமாக நம்பியுள்ள படம் தொடரி. இந்தப் படம் ஆகஸ்ட் 12 தொடரி வெளியாக இருந்தது ஆனால் அன்றைய தினம் 5 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. அதனால் இந்த தொடரி படத்தை செப்டம்பர் 2 ஆம் தேடி வெளியாக உள்ளது.

முழுக்க ரயில் பின்னணியில் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அமைத்திருக்கிறார் பிரபுசாலமன். இப்படத்தில் தனுஷ் ரயில்வே உணவுக்கூடத்தில் பணியாற்றுபவராகவும், அவருடைய காதலியாக கீர்த்தி சுரேஷூம் நடித்திருக்கிறார்கள்.

கிளைமாக்ஸ் காட்சியில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வேகமாக ஒரு ரயில் வருவது போன்ற காட்சிகள் இருப்பதால் அதன் கிராபிக்ஸை இறுதி செய்யும் பணிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்றன.

தள்ளி போன ரிலீஸ்

தள்ளி போன ரிலீஸ்

தொடரி படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்தவுடன், விரைவில் படத்தை தணிக்கை செய்து விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. முதலில் ஜூலை மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால், 'கபாலி' வெளியீட்டால் தற்போது சுதந்திர தின விடுமுறையை கணக்கில் கொண்டு வெளியிட நினைத்தார்கள்.

தொடரியுடன் கொடி

தொடரியுடன் கொடி

கிராபிக்ஸ் பணிகள் முழுமையடைவதில் தாமதமானதால் செப்டம்பர் 2ம் தேதி ரிலீஸ் செய்யப் போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 'தொடரி' வெளியீட்டைத் தொடர்ந்து 'கொடி' படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.

தனுஷ் - கீர்த்தி சுரேஷ்

தனுஷ் - கீர்த்தி சுரேஷ்

தொடரி படத்தில் தனுஷ் காதலியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க தம்பி ராமையா, கருணாகரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டவர்களும் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது. யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுத இமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் எதிர்பார்ப்பு

கீர்த்தி சுரேஷ் எதிர்பார்ப்பு

ரஜினி முருகன் நாயகி கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திக்கேயனுடன் நடித்துள்ள ரெமோ படம் அக்டோபரில் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாகவே தனுஷ் உடன் நடித்த தொடரி வெளியாவதால் டபுள் மகிழ்ச்சியில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

செப்டம்பர் 2ல் போட்டி பலம்

செப்டம்பர் 2ல் போட்டி பலம்

செப்டம்பர் 2ம் தேதி இருமுகன், சோனாக்ஷி சின்கா நடித்துள்ள அகிரா, இரு கில்லாடிகள் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தனுஷ் படமான தொடரியும் செப்டம்பர் 2ம் தேதி களமிறங்குகிறது.

English summary
Dhanush has confirmed that 'Thodari' will release on September 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil