»   »  என்னைப் பார்க்காமலேயே முக்கியத்துவம் கொடுத்தவர் சமுத்திரகனி - தொண்டன் நாயகி அர்தனா ஃபீலிங்

என்னைப் பார்க்காமலேயே முக்கியத்துவம் கொடுத்தவர் சமுத்திரகனி - தொண்டன் நாயகி அர்தனா ஃபீலிங்

By: Suganthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொண்டன் என்னும் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், 'நிறைய படங்களை சமுத்திர கனி இயக்குகிறார். அந்தப் படங்களைத் தரமாகத் தருகிறார்' என பாராட்டினார். 'என்னை பார்க்காமலேயே எனக்கு எப்படி இந்த முக்கிய ரோலைக் கொடுத்தீங்க?' என நாயகி அர்தனா கேட்டபோது மேடையில் இருப்பவர்கள் சிரித்தனர்.

இயக்குநர் சமுத்திரகனி இயக்கி நடிக்கும் தொண்டன் பட ஆடியோ ரிலீஸ் நடைபெற்றது. அதில் இயக்குநர் பாலா, வெற்றிமாறன், விஜய்மில்டன், கஞ்சா கருப்பு, நாயகிகள் சுனைனா, அர்தனா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


 Thondan audio launch and heroine Ardhana raised question

மேடையில் பேசிய நாயகி அர்தனா,''என்ன பார்க்காமலேயே எனக்கு எப்படி, இந்த ரோலைக் கொடுத்தீங்க'' என கேட்டபோது, மேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.


இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, நாங்கள் விசாரணை படம் முடித்து படத்தை முடித்துவிட்டோம் என்று ஃபீல் பண்ணுவதற்குள் கனி இரண்டு படங்களை முடித்து விட்டார். அவை தரமாகவும் இருக்கிறது என்பதுதான் முக்கியம்'' என கூறினார்.


அடுத்துப் பேசிய எழுத்தாளர், நடிகர் வேல. ராம மூர்த்தி,''மனதில் கறையில்லாமல் இருப்பவர்களால்தான் நல்ல படைப்பை தர இயலும். சமுத்திரகனியிடமிருந்து நல்ல படைப்புகள் வருதற்கு அவர் மனம்தான் காரணம்'' என கூறினார்.

English summary
Thondan tamil movie audio launch was held in Chennai. Directors including Bala,vetrimaran, Vijay milton andd many more celebrities took part in this function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil