For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தூக்கி வளர்த்த அன்புத்தங்கச்சி..ஜனனி கொடுத்த பட்டத்தால் கதறி அழுத ஏடிகே

  |

  தனக்கு ஜனனி முகமுடி அணிந்து நடிப்பவர் என கொடுத்த பட்டத்தால் கடுப்பான ஏடிகே டி.ராஜேந்தர் பட பாணியில் உறுகினார்.

  அன்புத்தங்கச்சியாக எவ்வளவு நேசித்திருப்பேன் என்னைபோய் இப்படி சொல்லிட்டியே என கோபமாக வாதம் செய்தார்.

  என்னதான் ஏடிகே உருகினாலும் ஜனனி அதை மதிக்கவில்லை, அவர் சொல்வதைத்தான் சொன்னார்.

  குயின்ஸி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி..அதெல்லாம் ஒரு பிரச்சனையா?குயின்ஸி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி..அதெல்லாம் ஒரு பிரச்சனையா?

   துரோகம், சூழ்ச்சி, சுயநலம் நிறைந்த பிக்பாஸ் வீடு

  துரோகம், சூழ்ச்சி, சுயநலம் நிறைந்த பிக்பாஸ் வீடு

  பிக் பாஸ் வீடு எப்பொழுதும் சுயநல கூட்டங்களாலும் மிச்சர் பார்ட்டிகளாலும் நிரம்பி இருக்கும். காரணம் பிக் பாஸ் வீட்டுக்கு வருபவர்கள் தாங்கள் வெல்ல வேண்டும் என்கிற முனைப்பிலேயே இருப்பார்கள். அதைத் தாண்டி ஓரளவு நல்ல சிந்தனைகள் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் லேசாக மாரினாலௌம் உடனடியாக நீங்கள் உங்களுக்காக மட்டுமே விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள். இதனுடைய விளைவு ஏமாற்றுதல், சூழ்ச்சி, புறம் பேசுதல் உட்பட அனைத்தும் நடக்கும். இதை எல்லாவற்றையும் தாண்டி பொதுவாக மேல் தட்டு வர்க்கத்தில் உள்ள போலி உறவுகளையும் பிக் பாஸ் வீட்டில் பார்க்கலாம். இதனாலையே பிக் பாஸ் வீடு எப்போதுமே துரோகங்களாலும், சூழ்ச்சியாலும் நிறைந்திருக்கும்.

   முதிய காதல், எகிறும் கோபம், மூர்க்கமான போட்டியாளர்கள்

  முதிய காதல், எகிறும் கோபம், மூர்க்கமான போட்டியாளர்கள்

  பிக் பாஸ் சீசன் 6-ல் இந்த முறை பலவிதமான போட்டியாளர்கள் வந்துள்ளனர். இந்த தடவை முக்கியமான விஷயம் என்னவென்றால் பொதுமக்கள் தரப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவதாக கூறி டிக் டாக் தனலட்சுமி, திருநங்கை ஷிவின் கணேசன் தேர்வு செய்யப்பட்டு உள்ளே வந்தனர். இது அல்லாமல் முதல்முறையாக அரசியல்வாதி ஒருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இந்த கலவை தற்போது பல இடங்களில் முட்டல் மோதல்களை ஏற்படுத்துவதை பார்க்கிறோம். அசீம், மணிகண்டன் போன்ற உணர்ச்சிவசப்பட்ட நபர்கள் அவர்களுக்கு சளைக்காமல் தனலட்சுமி, மகேஸ்வரி போன்றவர்களும் எகிறுவதை பார்க்கிறோம். ராபர்ட் மாஸ்டர் போன்ற முதிய காதல்களையும் பார்க்கிறோம். கதிரவன், ராம்குமார், ராபர்ட் மாஸ்டர், நிவாசினி போன்ற மிச்சர் பார்ட்டிகளையும் பார்க்க முடிகிறது இந்த சீசன் ஒருவித கலவையாக காணப்படுகிறது.

   காரியக்கார ஜனனியின் சூழ்ச்சி அறியாத ஏடிகே

  காரியக்கார ஜனனியின் சூழ்ச்சி அறியாத ஏடிகே

  பிக் பாஸ் வீட்டில் இளம் பெண்கள் தனியாக விளையாடுகிறார்கள் அவர்களுக்குள் ஒரு உலகத்தை வைத்துள்ளார்கள் இதில் அவ்வப்போது அனைவரும் புகுந்து வெளிவரும் விஷபாட்டிலாக ஜனனி இருப்பதை பார்க்க முடிகிறது. அவரை குழந்தை என்று நினைத்து ரச்சிதா ஆரம்பத்தில் ஒட்டிக்கொண்டு இருந்தார். பின்னர் ஏனோ தெரியவில்லை நைசாக ஜனனியை விட்டு ரச்சிதா விலகிவிட்டார். தனது ஊரை சேர்ந்தவர் என்கிற எண்ணத்தில் இலங்கை பாடகர் ஏகேடிக்கு ஜனனியிடம் அதிக அளவு பாசம் காட்டி நெருக்கமாக பழகி வந்தார். ஜனனி அதை பயன்படுத்திக் கொண்டார். அதே நேரம் பிக் பாஸ் வீட்டில் சர்வைவாக வேண்டுமென்றால் விஜய் டிவி செலிபிரிட்டிகரிடம் நெருக்கம் காட்ட வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்துள்ள ஜனனி எப்போதும் அமுதவாணன் டீமுடனேயே சுற்றுகிறார்.

   தூக்கி வளர்த்த அன்புத்தங்கச்சி..தூக்கி எரிஞ்சா கண்ணு குளமாச்சி

  தூக்கி வளர்த்த அன்புத்தங்கச்சி..தூக்கி எரிஞ்சா கண்ணு குளமாச்சி

  ஜனனியை சிறிய பெண் என்று நினைத்து அவருடன் அன்பாக பழகி வந்த ஏடிகே அதற்கான விலையை நேற்று கொடுத்தார். தாயம் டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டில் முகமூடி அணிந்து நல்லவர் போல் நடிப்பது யார்? என்று கேள்விக்கு ஜனனி ஏடிகே என்று சொன்னதும் வெளியில் பலரும் ஏடிக்கே என்று ஸ்லேட்டில் எழுதி காண்பிக்கவும் பார்த்து கடுப்பான ஏடிகே நான் உன்னை என் தங்கை போல் நினைத்து பழகுகிறேன், அறிவுரை சொல்கிறேன் ஆனால் நான் முகமூடி அணிந்த மனிதன் என்று சொல்கிறாய். அப்படியானால் உன் பார்வையில் நான் கெட்டவன் ஆகிவிட்டேன், என்று சொல்ல அதற்கு ஜனனி பொதுவாக கேட்ட கேள்விக்கு நான் பதில் சொன்னேன் என்று சொன்னார்.

   முதலில் அண்ணா, அப்புறம் அசீமா? எகிறிய அசீம்

  முதலில் அண்ணா, அப்புறம் அசீமா? எகிறிய அசீம்

  வீட்டு முதலில் வந்த காலத்தில் என்னிடம் ஏடிகே அண்ணா என்று பேசிக் கொண்டிருந்தாய், பிறகு ஏடிகே என்று அழைக்க ஆரம்பித்துவிட்டாய் உன்னுடைய ஒவ்வொரு மாற்றத்தையும் நான் கவனித்து வருகிறேன் என்று சொல்ல, அவரவர் நடத்தையை வைத்துதான் நான் அப்படி நினைக்கிறேன் என்று ஜனனி சொன்னார். என்னையும் ஆரம்பத்தில் அசீம் அண்ணா என்றாய். பின்னர் அசீம் என்றழைக்க ஆரம்பித்தாய் அதற்கும் என்னுடைய நடத்தை தான் காரணமா? என்று அசீம் எகிற ஜனனி தடுமாறி போய்விட்டார். இதற்கு இடையே தன்னை ஜனனி அவ்வாறு அழைத்ததும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் அதை சமாதானப்படுத்த முயன்றும் சமாதானம் அடையாத ஏடிகே கண்ணீர் விட்டப்படி உன்னை நான் எந்த அளவுக்கு சகோதரியாக நினைத்திருந்தேன் ஒரு நிமிடத்தில் என்னை தூக்கி எறிந்து வேஷக்காரன், கெட்டவன் என்பது போல் சித்தரிக்கிறாய் உன் விருப்பப்படி நான் இந்த வீட்டை விட்டு எவிக்‌ஷன் ஆகிறேன் என்று கண் கலங்கியப்படி வெளியே சென்றார்.

   கண்கலங்கிய ஏடிகே ஆறுதல் கூறிய டீம்

  கண்கலங்கிய ஏடிகே ஆறுதல் கூறிய டீம்

  ஆனால் ஜனனி அதைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் வெளியே போவது பற்றி என்னிடம் ஏன் கதைக்கிறீர்கள்? என்று எதிர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். வெளியே அவரை கதிரவன், விக்ரமன், அசீம் ஆகியோர் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் சமாதானமடையாத ஏடிகே, "தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு" என்பது போல் தன்னுடைய சோக கதையை சொல்லிக் கொண்டிருந்தார்.

  English summary
  ATK is angry with the title given by Janani, the masked contestant. No matter what ATK melts, how much I cared for her as a sweet Sister, ATK angrily argued that She had told her like this. Janani disrespects him and says what he says.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X