»   »  அமெரிக்காவில் தூங்கா வனத்தை வெளியிடும் புதிய நிறுவனம்!

அமெரிக்காவில் தூங்கா வனத்தை வெளியிடும் புதிய நிறுவனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸனின் தூங்கா வனம் படத்தின் அமெரிக்க விநியோக உரிமையை AZIndia.com என்ற நிறுவனம் பெரும் விலைக்கு வாங்கியுள்ளது.

விநியோகத் துறையில் இப்போதுதான் அடியெடுத்து வைக்கும் நிறுவனம் இது. தூங்கா வனத்தின் தமிழ், தெலுங்கு இரண்டையுமே அமெரிக்காவில் இந்த நிறுவனம்தான் வெளியிடுகிறது.

வரும் நவம்பர் 10ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பிரிமியர் காட்சிகள் அமெரிக்காவில் 9-ம் தேதிநடத்தப்படும் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Thoonga Vanam US rights sold out

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் தமிழக உரிமையைப் பெற எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனமும் காஸ்கோ சிவாவும் பேசி வருகின்றனர்.

படத்தை ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். கமலுடன் த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சம்பத், கிஷோர், ஆஷா சரத்உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

English summary
AZIndia.com, an upcoming distribution house has bought the USA theatrical rights of Kamal Haasan’s action thriller, Thoongaa Vanam for big price.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil