»   »  கமலின் 'தூங்காவனம்' திரைப்படத்தை கட்டாயம் பார்க்க தூண்டும் காரணங்கள்

கமலின் 'தூங்காவனம்' திரைப்படத்தை கட்டாயம் பார்க்க தூண்டும் காரணங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் நாளை தீபாவளியையொட்டி, தூங்காவனம் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. பிரெஞ்சு திரைப்படமான ஸ்லீப்லெஸ் நைட் என்பதன் தழுவல்தான் இத்திரைப்படம்.

பிரகாஷ்ராஜ், திரிஷா, கிஷோர் மற்றும் சம்பத், உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார்.


Thoongaa Vanam Preview & Top 10 Reasons To Watch The Kamal Haasan Starrer

இப்படத்தை பார்க்க ரசிகர்களை தூண்டும் சில காரணங்கள் இவைதான்: ஸ்லீப்லெஸ் நைட் திரைப்படம் த்ரிலுக்கு கேரண்டி கொடுக்க கூடியது. எனவே, தூங்காவனம், உலக நாயகன் நடிப்பில் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வரவழைக்கும் என்பது திண்ணம்.


பிரகாஷ்ராஜ், திரிஷா, கிஷோர் போன்றோர் நடிப்பு இந்த திரில் திரைக்கதைக்கு மேலும் வலு சேர்க்கும்.


கமல் ரீமேக் எடுக்கும் சமீபத்திய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பாபநாசம் கடைசி உதாரணம். கமலின் இந்த ரீமேக் தேர்வும் கைகொடுக்கும் என்று ரசிகர்கள் நம்பலாம்.


படத்தின் இயக்குநர் ராஜேஷ், கமலின் ராஜ்கமல் பிக்சர்சுன் நீண்ட கால தொடர்புகொண்டவர். கமலுடன் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அவரது தனது முழு திறமையையும் தூங்காவனம் திரைப்படத்தி்ல வாரி கொட்டியிருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.


இசையமைப்பாளர் ஜிப்ரான், பொதுவாக மெல்லிசைக்கு பெயர்பெற்றவர். த்ரில்லர் திரைப்படமான தூங்காவனத்தில் பிஜிஎம் இசை பேசப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பாக செயல்பட்டிருப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இவையெல்லாம் தூங்காவனத்தை திரும்பி பார்க்க வைக்கும் சில காரணங்களாகும்.

English summary
As 'Ulaganayagan' Kamal Haasan's Thoongaa Vanam is all set to unleash itself come November 10th (Tuesday), fans and movie goers are excited to catch the maverick actor on the silver screen, in what looks like a no-nonsense film. Adapted from the French flick, Sleepless Night, Thoongaa Vanam is reportedly about a cop who lands himself in a soup while trying to get away with a bag of cocaine. Since the storyline itself demands an intriguing screenplay, nothing less than an edge of the seat entertainer is expected from Kamal Haasan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil