»   »  முத்தத்திற்கு மதுஷாலினி... அடிதடிக்கு திரிஷா... வாய்ச் சண்டைக்கு ஆஷா சரத்... இதுதாங்க தூங்காவனம்!

முத்தத்திற்கு மதுஷாலினி... அடிதடிக்கு திரிஷா... வாய்ச் சண்டைக்கு ஆஷா சரத்... இதுதாங்க தூங்காவனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாகவே கமல் தனது படத்தில் மற்ற நடிகர்களைப் பெயர் வாங்க விடாமல், அத்தனைப் பாராட்டுகளையும் அவரே தட்டிச் சென்று விடுவார். அதற்கு சற்றும் குறைவில்லாமல் வந்துள்ளது தூங்காவனம்.

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் தூங்கா வனம். திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷா சரத் என நட்சத்திரப் பட்டாளம் மிகுந்த கதைக்களம் என்றாலும், எல்லாரையும் அடக்கி வாசிக்க வைக்கப்பட்டுள்ளது சற்று உறுத்தலாகவே உள்ளது.


அதிலும், மூன்று நாயகிகள் இருந்தும் படத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக அவர்களுக்கு காதல் காட்சிகள் இல்லை.


ஆஷா சரத்...

ஆஷா சரத்...

திரிஷ்யம் படம் பார்க்கும் போதே, யார்ரா இது இப்டி மிரட்டியிருக்காங்களே என தமிழ் ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்தவர் ஆஷா சரத். தமிழில் முதல்படமான பாபநாசம் படத்திலும் தனது வேலையைக் கச்சிதமாகவே செய்திருந்தார்.


கமலின் மனைவி...

கமலின் மனைவி...

ஆஷா சரத்தின் இரண்டாவது படமும் கமலுடன். அதிலும், கமலுக்கு மனைவியாக. ஆனால், சொல்லிக் கொள்ளும்படி காட்சிகள் இல்லை அவருக்கு.


சண்டை...

சண்டை...

மகனைக் காணவில்லை என பேருக்கு வந்து கமலுடன் சண்டை போட்டுச் செல்கிறார். மற்றபடி, திறமையான நடிகையை இரண்டாவது படத்திலேயே வீணடித்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.


கடமை தான் முக்கியம்...

கடமை தான் முக்கியம்...

ஒரே ஊரில் இருந்தும் கமலை ஆபிஸ் தேடி வந்து சண்டை போடும் ஆஷா சரத், மகனைப் பார்க்க வீடு வரவில்லை. மாறாக ஹாஸ்பிடல் செல்கிறார். என்னா ஒரு வேலை பக்தி.


மதுஷாலினி...

மதுஷாலினி...

மது ஷாலினி, கமலிடம் முத்தம் வாங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மற்றபடி இவருக்கும் படத்தில் அதிக வேலையில்லை.


மந்திரப்புன்னகை...

மந்திரப்புன்னகை...

கடைசிக் காட்சியில் எப்படியோ அப்பாவின் மனமறிந்து மது ஷாலினி நர்சாக வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கே கமலைக் கொண்டு வந்து சேர்க்கிறார் அவரது மகன். அவரும் டாக்டர் செய்யும் வேலையான, ‘உங்க அப்பா நல்லாயிருக்கார்' எனக் கூறி மந்திரப்புன்னகை சிந்தி விட்டுச் செல்கிறார்.


வேடிக்கை எங்கள் வாடிக்கை...

வேடிக்கை எங்கள் வாடிக்கை...

இவர்களில் இருந்து சற்று வேறுபட்டு, கமலிடம் அடி வாங்கி வித்தியாசமான போலீஸ் வேடத்தில் கலக்கலாக நடித்திருக்கிறார் திரிஷா. ஆனால், கடைசிக் காட்சியில் அவரும் தோளில் குண்டடி பட்டு, ரத்தம் வடிய கமலைக் காண வரும் காட்சி வேடிக்கை.


English summary
Kamal Haasan’s latest release ‘Thoongavanam’ also starring Trisha Krishnan has been receiving praises from all over. The movie, which seems to be spreading by a positive word of mouth, is being looked forward to doing good business at the box office this Diwali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil