»   »  தூங்காவனம்... அமெரிக்காவைத் தவிர மற்ற இடங்களில் பெரிசா போகலை!

தூங்காவனம்... அமெரிக்காவைத் தவிர மற்ற இடங்களில் பெரிசா போகலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸனின் தூங்காவனம் படம் அமெரிக்காவைவைத் தவிர, பிற இடங்களில் எதிர்ப்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது முதல் வார முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்தப் படம் இதுவரை ரூ 18 கோடிகளை உலகம் முழுக்க வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


வெளுத்த மழை

வெளுத்த மழை

சென்னை மற்றும் தமிழகத்தில் 300 அரங்குகளில் இந்தப் படம் வெளியானது. தொடர் கன மழை காரணமாக தியேட்டர் பக்கமே மக்கள் ஒதுங்காத சூழலால் தீபாவளிப் படங்களான வேதாளம், தூங்காவனம் இரண்டையுமே பார்க்க ஆளில்லாத சூழல்.


இவ்ளோதானா?

இவ்ளோதானா?

படம் வெளியாகி முதல் எட்டு தினங்களில் இந்தப் படம் உலகெங்கும் ரூ 18 கோடிகளை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ 14 கோடிகளை வசூலித்துள்ளது.


அமெரிக்காவில்

அமெரிக்காவில்

அமெரிக்காவில் 101 அரங்குகளில் வெளியான இந்தப் படம் ரூ 3 கோடிகளை வசூலித்துள்ளது.


சென்னையில்...

சென்னையில்...

நகர்ப் பகுதி ரசிகர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பார்கள் என சில விமர்சகர்கள் கூறியிருந்தனர். ஆனால் அப்படியொன்றும் பார்த்த மாதிரி தெரியவில்லை. தூங்காவனத்தின் எட்டு நாள் சென்னை வசூல் ரூ 1.61 கோடிதான்!


மற்ற நாடுகளில்?

மற்ற நாடுகளில்?

இங்கிலாந்தில் இந்தப் படத்துக்கு குறைவான வசூல்தான் கிடைத்துள்ளது. எட்டு நாட்களில் ரூ 39 லட்சத்தை வசூலித்துள்ளது தூங்காவனம், ஆஸ்திரேலியாவில் ரூ 24 லட்சமும், மலேசியாவில் ரூ 93 லட்சமும் கிடைத்துள்ளது.


தெலுங்கு..

தெலுங்கு..

இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பான சீகட்டி ராஜ்ஜியம் நாளை நவம்பர் 20-ம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகவுள்ளது.


English summary
Here is the exact box office collection of Kamal Haasan starrer "Thoongavanam". The movie has collected Rs 18 cr worldwide in 8 days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil