»   »  அரசியல் மாற்றத்தை விரும்புபவர்கள் விஷாலுக்கு ஓட்டு போடுங்க: சுசீந்திரன்

அரசியல் மாற்றத்தை விரும்புபவர்கள் விஷாலுக்கு ஓட்டு போடுங்க: சுசீந்திரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் மாற்றம் வேணும்னு நினைக்கிறவன் விஷால் சாருக்கு ஓட்டு போடுங்க. மக்களுக்காக உண்மையா உழைப்பாரு என இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால். திங்கட்கிழமை அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் சுசீந்திரன் கடிதம் மூலம் கூறியிருப்பதாவது,

சுசீந்திரன்

சுசீந்திரன்

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் விஷால் சாருக்கு எனது வாழ்த்துக்கள். விஷால் சார் நடிகர் சங்க தேர்தல்ல நிக்கும் போதும், தயாரிப்பாளர் சங்க தேர்தல்ல நிக்கும் போதும் 100% அவர் தோத்துடுவாருனுதா எல்லாரும் நெனச்சாங்க...அந்த கருத்து கணிப்ப அவரோட உழைப்பும் உண்மையும் பொய்யாக்கி விஷால் சார் ஜெயிச்சாரும். இந்த தேர்தலிலும் விஷால் சார் ஜெயிப்பார்னு நான் நம்புறேன். விஷால் சாருக்கு என் வாழ்த்துக்கள்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

விஷால் சாருக்காக நான் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பணம் வாங்காமல் ஓட்டுப்போடும் மக்கள் இன்னும் நெறைய பேர் இருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் உணர்த்தும்.

வாக்கு

வாக்கு

விஷால் சாருக்காக நான் பிரச்சாரம் செய்வேன். கண்டிப்பா இந்த லெட்டர் பார்த்தா குற்றம் மட்டுமே கண்டுபிடிக்கும் பரம்பரையை சேர்ந்தவன் "நீ பிரச்சாரம் செய்தால் எவன்டா ஓட்டு போடுவானு கேப்பானுங்க" எனக்கு எல்லா ஊரிலும் தம்பிமார்கள் இருக்கிறாங்க. மாற்றம் வராதா என்று ஏக்கத்துடன் அந்த தம்பிகள் எனக்காக விஷால் சாருக்கு ஓட்டுப் போடுவாங்க.

நல்லவன்

நல்லவன்

தமிழ் என்ற ஒரு சொல்லை பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யாமல், நல்லவன் எவன் வந்தாலும் நமக்கு நல்லது, விஷால் உண்மைக்கும் நல்லவன் அரசியல் மாற்றம் வேணும்னு நினைக்கிறவன் விஷால் சாருக்கு ஓட்டு போடுங்க. மக்களுக்காக உண்மையா உழைப்பாரு. அது என் கருத்து என தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

English summary
Director Suseenthiran has asked the people who is looking for a change to vote for actor Vishal in the upcoming RK Nagar bypoll. Suseenthiran said that he is going to do campaign for Vishal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil