“தோட்டா லோட் ஆக வெயிட்டிங்”: வெறித்தனமாக வெளியான விஷாலின் லத்தி ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

சென்னை: விஷால் தற்போது லத்தி, மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

வினோத் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் லத்தி படத்தின் ஃபர்ஸ் சிங்கிளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதேபோல், விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் பற்றியும் அப்டேட் கிடைத்துள்ளது.

விஷாலின் லத்தி

விஷாலின் லத்தி

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை. அதனைத் தொடர்ந்து விஷால் தற்போது லத்தி, மார்க் ஆண்டனி படங்களில் நடித்து வருகிறார். இதில், லத்தி படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வினோத்குமார் இயக்கும் இந்தப் படத்தில் விஷால் போலீஸாக நடித்துள்ளார். ஏற்கனவே லத்தி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் செம்மையாக ரீச்சாகி இருந்தது. இந்நிலையில், லத்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றி அப்டேட் வெளியாகியுள்ளது.

தோட்டா லோட் ஆக வெயிட்டிங்

தோட்டா லோட் ஆக வெயிட்டிங்

ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள விஷாலின் லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. யுவன் இசையில் 'தோட்டா லோட் ஆக வெயிட்டிங்' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடல், விஷாலின் ஆக்சன் ட்ரீட்டுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 5ம் தேதி 'தோட்டா லோட் ஆக' பாடல் வெளியாகவுள்ள நிலையில், தற்போது அதன் ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

கேங்ஸ்டர் மார்க் ஆண்டனி

கேங்ஸ்டர் மார்க் ஆண்டனி

இன்னொரு பக்கம் விஷாலின் 'மார்க் ஆண்டனி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில், விஷாலுக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார். மார்க் ஆண்டனி படத்தில் விஷால் இதுவரை நடித்திராத வித்தியாசமான ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் ஏற்கனவே செம்ம மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஷால் பிறந்தநாளில் வெளியாகி இருந்தது. அடர்த்தியான முடி, அதிகமான தாடி என வித்தியாசமான லுக்கில் இருக்கும் விஷால், கையில் துப்பாக்கியுடன் ஆக்ரோஷமாக காணப்பட்டார்.

சென்னையில் ஷூட்டிங்

சென்னையில் ஷூட்டிங்

விஷால் ஜோடியாக ரித்து வர்மா நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா இருவருமே இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது சென்னையில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே இறுதிக்கட்ட படப்பிடிப்பாக இருக்கலாம் எனவும், விரைவில் ஷூட்டிங் நிறைவடையும் என்றும் சொல்லப்படுகிறது. ஒரேநேரத்தில் விஷாலின் லத்தி, மார்க் ஆண்டனி படங்கள் பற்றிய அப்டேட் வெளியானதை, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X