»   »  ரசிகர்களின் உணர்வுகளை உரசிய 'தோழா'... முதல் வாரத்தில் 30 கோடிகளைக் குவித்தது

ரசிகர்களின் உணர்வுகளை உரசிய 'தோழா'... முதல் வாரத்தில் 30 கோடிகளைக் குவித்தது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்தி-நாகர்ஜுனா நடிப்பில் வெளியான தோழா திரைப்படத்தின் முதல் வார வசூல் 30 கோடிகளைத் தொட்டுள்ளது.

கடந்த வாரம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் தோழா வெளியானது. இந்தப் படத்தில் கார்த்தியுடன் 3 வது முறையாக தமன்னா இணைந்து நடித்திருந்தார்.


ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்கள் இப்படத்திற்கு பெரிதும் தோள் கொடுக்க, விளைவாக பாக்ஸ் ஆபீஸில் இப்படம் நல்ல வசூலைக் குவித்து வருகிறது.


தோழா

தோழா

தெலுங்கில் 'ஊப்ரி' தமிழில் 'தோழா' என 2 மொழிகளிலும் இப்படம் கடந்த வாரம் வெளியானது. கார்த்தி-நாகர்ஜுனாவுடன் இணைந்து இப்படத்தில் பிரகாஷ் ராஜ், தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர்.


சூர்யா, ராஜமௌலி

சூர்யா, ராஜமௌலி

இப்படத்தைப் பார்த்த சூர்யா மற்றும் ராஜமௌலி உள்ளிட்ட நட்சத்திரங்கள் படம் நன்றாக இருப்பதாக பாராட்டியிருந்தனர். தமிழ் தவிர தெலுங்கு மொழியிலும் கார்த்தியின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.


3௦ கோடிகள்

3௦ கோடிகள்

தமிழ்நாட்டில் 325 திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் வாரத்தில் உலகம் முழுவதும், 30 கோடிகள் வரை வசூலித்துள்ளது. கார்த்தியின் படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு தோழா மிகப்பெரிய ஓபனிங் வசூலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுருதிஹாசன்

சுருதிஹாசன்

கார்த்தி ஜோடியாக முதலில் ஒப்பந்தமான சுருதிஹாசன் தனக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்று அப்படத்திலிருந்து விலகிவிட, அவருக்குப்பதில் தமன்னா நடித்திருந்தார். பையா, சிறுத்தை படங்களுக்குப்பின் தமன்னா- கார்த்தி 3 வது முறையாக இணைந்த இப்படமும் வெற்றியைப் பெற்றதால், தற்போது கோலிவுட்டின் ராசி ஜோடியாக இருவரும் மாறியுள்ளனர்.


English summary
Karthi-Nagarjuna Starrer Thozha Collects 30 Crore From Worldwide Box Office in First Weekend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil