காமெடி படமா? கவர்ச்சி படமா?...சுந்தர்.சி படத்தில் இணைந்த மூன்று பிக்பாஸ் நடிகைகள்
சென்னை : சுந்தர்.சி தற்போது இயக்கி வரும் காமெடி படத்தில் பிக்பாஸ் நடிகைகள் மூன்று பேர் நடிக்க புக் ஆகி உள்ளார்களாம். வேறு பிக்பாஸ் பிரபலங்கள் யாராவது இணைவார்களா என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.
சூப்பர் ஹிட் காமெடி படங்களை இயக்குவதில் வல்லவரான டைரக்டர் சுந்தர்.சி, பிறகு நடிகராகி தானே பல படங்களில் நடிக்க துவங்கினார். மீண்டும் டைரக்டஷனுக்கு திரும்பினாலும் பேய் படமாக வரிசையாக அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார்.

காமெடி படம் இயக்கும் சுந்தர்.சி
தற்போது சுந்தர்.சி இயக்கிய மெகா ஹிட் காமெடி காதல் படமான உள்ளத்தை அள்ளித்தா படத்தை மிஞ்சும் அளவிற்கு மற்றொரு காமெடி படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங் ஜனவரி மாத இறுதியில் ஊட்டியில் துவங்கி, ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. பெரிய நட்சத்திர பட்டாளத்தையே வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி.

ஜீவாவிற்கு தங்கையாக டிடி
ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், அமிர்தா ஐயர் நடித்து வரும் இந்த படத்தில் சுந்தர்.சி மற்றும் பிரதாப் போத்தன் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்களாம். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல தொகுப்பாளினியான டிடியும் நடிக்கிறார் என சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில் ஜீவாவின் தங்கை ரோலில் தான் டிடி நடிக்கிறாராம்.

பிக்பாஸ் நடிகைகளும் இருக்காங்களா
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக பெயரிடப்படாத இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான சம்யுக்தா கார்த்திக், ரைசா வில்லன், ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று பேர் நடிக்கிறார்களாம். ஏற்கனவே இவர்கள் மூவரும் கவர்ச்சியில் சோஷியல் மீடியாவை கலக்கி வருகின்றனர். இந்நிலையில் இவர் மூவரும் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கிறார்கள் என்பதால் படத்திலும் கவர்ச்சி கொஞ்சம் அதிகமாகவே இருக்குமா என ரசிகர்கள் இப்போதே கேட்க துவங்கி விட்டனர். அதோடு வேறு யாராவது பிக்பாஸ் பிரபலமும் இதில் இணைவார்களா என கேட்டு வருகின்றனர்.

சம்யுக்தா பகிர்ந்த போட்டோ
ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தாவை தொடர்ந்து தானும் சுந்தர்.சி படத்தில் இணையும் தகவலை சம்யுதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் செட்டில் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் பகிர்ந்து, தெரிவித்துள்ளார். சுந்தர்.சி படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், டிடி, ஐஸ்வர்யா ஆகியோருடன் இணைந்து நடிக்க உள்ளது மிகப் பெரிய மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











