Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாழ்க்கையில் நான் நம்பிய 3 பெண்கள் என்னை கைவிட்டார்கள்....தனுஷ் வேதனை
சென்னை : ரசிகர்களின் ஃபேவரைட் காம்போவாக தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி இருந்து வருகிறது
பொல்லாதவன்,ஆடுகளம், வடசென்னை, அசுரன் என இவர்கள் இருவரும் இணையும் திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வருகிறது
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் பேசிய தனுஷ் என் நம்பிக்கையை காப்பாற்றிய ஒரே ஆள் வெற்றிமாறன் தான் என புகழ்ந்து பேசியுள்ளார்.
ஜிவி பிரகாஷோட அடுத்தப்படம்... ரிலீஸ் எப்போன்னு பாருங்க!

தனுஷ் உடன் கூட்டணி
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் இயக்குனர் வெற்றி மாறன். தனது ஒவ்வொரு படங்களிலும் பார்க்கும் அனைவரையும் பிரமிக்க வைத்து வரும் வெற்றிமாறன் மேக்கிங் பார்த்து மற்ற இயக்குனர்களும் பிரமித்துப் போய் உள்ளனர். பொல்லாதவன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனரான வெற்றிமாறன் முதல் படத்திலேயே தனுஷ் உடன் கூட்டணி அமைத்தார். தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி இங்குதான் பொல்லாதவன் படத்தில் தான் தொடங்கியுள்ளது. பொல்லாதவன் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இன்று வரை தொடர்ந்து பயணித்துக் கொண்டு உள்ளனர்

தேசிய விருதை வென்றது
பொல்லாதவன்,ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் என இந்த கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் இந்திய அளவில் மிகப் பெரிய கவனத்தைப் பெற்று வருகிறது. இதில் ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படம் தேசிய விருதையும் வென்றுள்ளது. இதனால் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணையும் திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்க வடசென்னை இரண்டு தற்போது உருவாகி வருகிறது.

கதைகூட கேட்காமல்
பொதுவாக கதை கேட்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகும் தனுஷ் வெற்றிமாறன் படங்கள் என்றால் மட்டும் கதைகூட கேட்காமல் வெற்றிமாறன் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்யக்கூடியவர். அந்த அளவிற்கு வெற்றி மாறன் மீது தனுஷ் நம்பிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் பேசிய தனுஷ் வெற்றிமாறன் உடனான நட்பு குறித்து பேசியுள்ளார்

நம்பிக்கையை காப்பாற்றிய வெற்றிமாறன்
அதில் அவர் கூறியுள்ளதாவது : நான் லைஃப்ல ரொம்ப ரொம்ப நம்பிக்கை வெச்ச நாலு பேர்ல ஒருத்தர் வெற்றிமாறன். மீதி மூனு பேரும் பொண்ணுங்க. அவ்வளவு நம்பிக்கையே நான் யாரு மேலயும் வெச்சது இல்ல. பாக்கி 3 பேரும் என்னை கீழே தள்ளி விட்டுட்டாங்க . என் நம்பிக்கையை காப்பாற்றிய ஒரே ஆள் வெற்றிமாறன் மட்டும்தான். அதைவிட பெரிய விஷயம் என்னன்னா வெற்றியை சுவைத்ததுக்கு அப்புறம் வெற்றிய பார்த்ததுக்கு அப்புறம் என்ன மறந்துட்டு போன ஒருத்தர எனக்கு தெரியும். அதைவிட பெரிய வெற்றியைப் பார்த்த வெற்றிமாறன் தனுஷ விட்டு நான் வரமாட்டேன்னு இன்னும் என் கூட இருக்காரு. என வெற்றிமாறன் உடனான தனது நட்பையும் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை குறித்தும் தனுஷ் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.