»   »  அருவி படத்தில் நடிக்க மறுத்த 3 பிரபல ஹீரோயின்கள்: இப்போ ஃபீல் பண்ணுவார்களோ?

அருவி படத்தில் நடிக்க மறுத்த 3 பிரபல ஹீரோயின்கள்: இப்போ ஃபீல் பண்ணுவார்களோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அருவி படத்தில் மூன்று முன்னணி நடிகைகள் நடிக்க மறுத்துள்ளனர்.

புதுமுகம் அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்த அருவி படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. அன்றில் இருந்து இன்று வரை சமூக வலைதளங்களில் அருவி பற்றி தான் பேச்சாக கிடக்கிறது.

சினிமா ரசிகர்கள் அருவியை தலை மீது வைத்து கொண்டாடுகிறார்கள்.

சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மை

அருவி படத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்துள்ளதால் லட்சுமி ராமகிருஷ்ணன் கோபத்தில் ட்வீட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு பெண்ணை அவமதித்து படம் எடுப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சமந்தா

சமந்தா

அருவி படத்தில் நடிக்குமாறு நயன்தாரா, சமந்தா, ஸ்ருதி ஹாஸன் ஆகியோரிடம் கேட்டுள்ளார் அருண். ஆனால் மூன்று பேருமே நடிக்க மறுத்துவிட்டார்களாம்.

அதிதி

அதிதி

நயன், சமந்தா, ஸ்ருதி மறுத்த பிறகே அதிதி பாலனை ஒப்பந்தம் செய்துள்ளார் அருண். படத்திற்காக வெயிட்டை அதிக அளவில் குறைக்க வேண்டும் என்று அருண் கூறியது நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிக்கு ஒத்து வரவில்லையாம்.

வெற்றி

வெற்றி

அருவி படம் வெற்றி பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் செமயமாக பேசப்படுகிறது. இதை எல்லாம் பார்த்து நயன்தாரா, சமந்தா, ஸ்ருதி ஹாஸன் ஃபீல் பண்ணியிருப்பார்களோ? இருக்கலாம்.

வேலைக்காரன்

வேலைக்காரன்

அறம் படம் மூலம் அனைவரையும் தன்னை பற்றி பேச வைத்தார் நயன்தாரா. இந்நிலையில் அவர் நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Arun Prabhu had approached Nayanthara, Samantha and Shruti Haasan to act in Aruvi. But the three leading ladies turned down the offer citing various reasons. Arun's Aruvi has got huge applause from the audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X