»   »  கபாலி... குமுதவள்ளி... மீனா...

கபாலி... குமுதவள்ளி... மீனா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படத்தின் காய்ச்சல் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு பரவியுள்ள நிலையில் இந்த படம் ரஜினியை மட்டுமே குறிவைத்து புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் ரஜினியின் பெயர் கபாலீஸ்வரன் என்றும், ஜோடியாக நடிக்கும் ராதிகா ஆப்தேவின் பெயர் குமுதவள்ளி என்றும் தெரியவந்துள்ளது.


இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியை தவிர மூன்று பவர்புல் பெண் கேரக்டர்கள் இருப்பதாகவும், அவர்களுடைய அதிகபட்ச உழைப்பு, ரசிகர்களை நிச்சயம் திருப்தி செய்யும் என்றும் இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


மூன்று பெண்கள்

மூன்று பெண்கள்

கபாலி படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா மற்றும் ரித்விகா ஆகியோர்களின் கேரக்டர்கள் நிச்சயம் படம் வெளிவந்த பின்னர் பேசப்படும் என்று ரஞ்சித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குமுதவள்ளி

குமுதவள்ளி

கபாலீஸ்வரனாக ரஜினி நடிக்க, ரஜினியின் மனைவியாக குமுதவள்ளி கேரக்டரில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார். ரஜினியின் மகளாக தன்ஷிகா நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மனதை மயக்கும் மாயநதி

மனதை மயக்கும் மாயநதி

தனது கதாபாத்திரம் பற்றி பேசிய குமுதவள்ளி, இளமையான குமுதவள்ளியை விட வயதான குமுதவள்ளிதான் தனக்கு பிடித்தமானது என்று கூறியுள்ளார். "மாயநதி இன்று... மார்பில் வழியுதே... தூய நரையிலும்... காதல் மலருதே.." இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை இயக்குநர் ரஞ்சித் சொன்ன போது உணர்ந்து நடித்தேன் என்று கூறியுள்ளார்.


ரித்விகா

ரித்விகா

மீனா என்ற முக்கிய கேரக்டரில் ரித்விகா நடித்துள்ளதாகவும் இந்த கேரக்டரின் முக்கியத்துவம் குறித்து ரஞ்சித் இதுவரை சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளதாகவும் படம் வெளிவந்த பின்னர் இந்த கேரக்டரின் முக்கியத்துவம் அனைவருக்கும் புரியவரும் என்றும் கூறப்படுகிறது.
எளிமையான ரஜினி

எளிமையான ரஜினி

ரித்விகாவின் கபாலி அனுபவம் சுவாரஸ்யமாக இருந்துள்ளது. ரஜினியின் எளிமை பற்றி கூறும் ரித்விகா, சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியுடன் நடிக்கும் போது படபடப்பாக இருந்ததாக கூறும் ரித்விகா, இயல்பாக பேசி தனது டென்சனை குறைத்தார் ரஜினி என்கிறார்.


கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம்

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம்

நல்லவனுக்கு நல்லவன், மன்னன், படையப்பா ஆகிய படங்களில் ரஜினிக்கு சமமாக நாயகிகளின் கேரக்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் 'கபாலி' படத்திலும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படுகிறது. படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் என்று கூறியுள்ளார் இயக்குநர் ரஞ்சித்.


English summary
Pa Ranjith, the director Superstar Rajinikanth starrer Kabali, said that there are three powerful ladies Radhika Apte is playing the role of Rajinikanth’s wife as Kumudhavalli. Radhika says she plays the wife of the don.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil