»   »  ஜீவா படத்தில் வில்லத்தனம் செய்யும் துளசி?

ஜீவா படத்தில் வில்லத்தனம் செய்யும் துளசி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீவாவுடன் யான் படத்தில் நடிக்கும் துளசி அதில் வில்லத்தனம் செய்யும் ஹீரோயினாக வருகிறாராம்.

ராதாவின் இளைய மகள் துளசி மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அவரது அக்கா கார்த்திகாவை போன்று தெலுங்கு படத்தில் அறிமுகமாகிவிட்டு தமிழுக்கு வராமல் நேராக கோடம்பாகத்திற்கே வந்துவிட்டார்.

முதல் படமே மணிரத்னம் படம் நல்ல ஆரம்பம் என்ற அவரது நினைப்பில் இடி விழுந்தது போன்று கடல் படம் ஊத்திக் கொண்டது. இதனால் துளசி கவலையில் இருந்தார். இருப்பினும் கவலையை ஓரங்கட்டிவிட்டு ஜீவாவுடன் சேர்ந்து யான் படத்தில் நடித்து வருகிறார்.

கடலில் அப்பாவி

கடலில் அப்பாவி

கடல் படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்திருந்தார் துளசி.

2வது படத்தில் வில்லி

2வது படத்தில் வில்லி

2வது படமான யானில் துளசி மரத்தைச் சுற்றி பாட்டுப்பாடும் ஹீரோயின் இல்லையாம். மாறாக வில்லத்தனம் கலந்த ஹீரோயினாக நடிக்கிறார் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

யான் கைகொடுக்குமா?

யான் கைகொடுக்குமா?

வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் யான் படம் தனக்கு நிச்சயம் கைகொடுக்கும் என்று துளசி நம்பிக்கையோடு இருக்கிறார்.

English summary
Buzz is that Thulasi is doing a character that is a mixture of heroine and villain in the upcoming flick Yaan.
Please Wait while comments are loading...