Don't Miss!
- News
அறிவாலயம்+ஆழ்வார்பேட்டை: ஒரே மேடையில்.. ‘மாஸ்’ சம்பவத்திற்கு ரெடி? சூசகமாக சொன்ன கமல்! ஜரூர் பிளான்!
- Lifestyle
Today Rasi Palan 26 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது...
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
துணிவு ப்ரீமியர் பார்த்த ஷாலினி.. செம ஹாப்பி.. கண்டிப்பா படம் பிளாக்பஸ்டர் தானாம் பாஸ்!
சென்னை: போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள துணிவு படத்தின் ப்ரீமியர் ஷோ இன்று சென்னையில் உள்ள 4 ஃப்ரேம்ஸ் ஸ்டூடியோவில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா உள்ளிட்டோர் துணிவு படத்தை பார்த்து ரசித்தனர். பின்னர் வெளியே செம சந்தோஷத்தில் வந்த ஷாலினியுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 11ம் தேதி வெளியாகிறது. சிறப்பு காட்சி சில பிரபல திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணிக்கே திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்புகளை குறைக்கத்தான் போராட வேண்டியிருக்கு.. ரசிகர்கள் ஈகோவை விளாசிய துணிவு பட இயக்குநர்!

வாரிசை முந்திய துணிவு
வாரிசு படம் முதலில் ரிலீஸ் ஆகுமா? அல்லது துணிவு படம் முதலில் ரிலீஸ் ஆகுமா? என்கிற கேள்விக்கு ஒரு வழியாக இரு படங்களும் ஜனவரி 11ம் தேதியே நேரடி மோதலை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 4 மணிக்கு வாரிசு படம் வெளியாகும் முன்னதாகவே நள்ளிரவு 1 மணிக்கே துணிவு படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், அதற்கு முன்னதாக இன்றே அதன் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டு விட்டது.

துணிவு ப்ரீமியர்
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரகனி, பிரேம் குமார், பக்ஸ், சிபி, அமீர் மற்றும் பாவனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் ப்ரீமியர் ஷோ இன்று மாலை சென்னையில் உள்ள 4 ஃப்ரேம்ஸ் ஸ்டூடியோவில் உள்ள தியேட்டரில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.

படம் பார்த்த ஷாலினி
துணிவு படத்தின் ப்ரீமியர் ஷோவில் கலந்து கொண்ட நடிகை ஷாலினி அஜித் படத்தை பார்த்து ரசித்தார். வெளியே வரும் போது செம ஹாப்பியாக வந்த அவரிடம் ரசிகர்கள் படத்தை பற்றி கேட்கும் போது புன்னகை புரிந்தார். மேலும், ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

அஜித் மேனேஜர்
நடிகை ஷாலினி உடன் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் துணிவு படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்தார். படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த அவர் ரசிகர்களிடம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித்தின் துணிவு படம் வரும் ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் அஜித் ரசிகர்களை கொண்டாட வைக்க உள்ளது கன்ஃபார்ம்.

பணம் தான் கதை
ஏழை மக்களுக்கு கிடைக்காமல் பணக்காரர்கள் பதுக்கி வைக்கும் பணத்தை எடுத்து ஏழை மக்களுக்கு கொடுக்கும் ராபின் ஹுட் கதை தான் அஜித்தின் துணிவு படத்தின் கதை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆக்ஷன், அதிரடி, காமெடி, கருத்து என ஏகப்பட்ட விஷயங்கள் படம் முழுவதும் ரசிகர்களை உற்சாகப்படுத்த போகிறது என ரிப்போர்ட்கள் வெளியாகி உள்ளன.

வாரிசு என்ன ஆகப் போகுதோ
அஜித்தின் துணிவு படம் இப்பவே பிளாக்பஸ்டர் ரிப்போர்ட்டுகள் வந்து குவிந்து கொண்டு இருக்கும் நிலையில், விஜய்யின் வாரிசு படத்துக்கும் இதே போல பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்குமா? அல்லது மீண்டும் பீஸ்ட் படம் போல சறுக்குமா என்பதை இன்னும் 2 நாட்கள் கழித்து தெரிந்து கொள்வோம்!