துணிவு பாக்ஸ் ஆபிஸ்: இதுதான் அஜித் கேரியரில் பெஸ்ட் ஓபனிங்... வசூலில் தரமான சம்பவம்

சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது.

அஜித் - ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

ரசிகர்களுக்கான பேன் பாய் சம்பவமாக உருவாகியுள்ள துணிவு படத்தில் அஜித்தின் ஆக்‌ஷன் ட்ரீட் ஒர்க்அவுட் ஆகியுள்ளது. அஜித் கேரியரில் துணிவு திரைப்படத்துக்கு சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டார்க் டெவில்

டார்க் டெவில்

அஜித் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்கள், பெரிய அளவில் சக்சஸ் கொடுக்கவில்லை. இதனையடுத்து அஜித் - ஹெச் வினோத் கூட்டணியில் மூன்றாவதாக உருவான துணிவு நேற்று திரையரங்குகளில் வெளியானது. டார்க் டெவில் என்ற மாஸ் ஹீரோவாக நடித்துள்ள அஜித், நெகட்டிவ் ரோலில் மரண மாஸ் காட்டியுள்ளார். இந்தப் படத்தில் இவரது கேரக்டருக்கு பெயரே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஓபனிங்

சூப்பர் ஓபனிங்

துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. வங்கிக் கொள்ளை பின்னணியில் அங்கு நடக்கும் மியூச்சல் பண்ட் மோசடி, கிரெடிக் கார்டு ஏமாற்று வேலைகள் என மக்கள் எப்படியெல்லாம் பணத்தை இழக்கிறார்கள் என சோஷியல் மெசேஜ்ஜோடு இந்தப் படம் உருவாகியுள்ளது. சில ஆக்‌ஷன் காட்சிகளில் கொஞ்சம் ஓவர் டோஸ் இருந்தாலும், அஜித்துக்கு இந்தப் படம் தரமான ஓபனிங் கொடுத்துள்ளது. சமீபத்தில் வெளியான அஜித்தின் திரைப்படங்களில், துணிவு தான் அவருக்கு மாஸ் கம்பேக் படமாக அமைந்துள்ளதாம்.

பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

அஜித்தின் துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட்டது. துணிவு படத்தின் FDFS காட்சியை பார்க்க அஜித் ரசிகர்கள் 9ம் தேதி மாலையில் இருந்தே காத்திருந்தனர். மேலும், தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் துணிவு படத்துக்கு நல்ல கலெக்‌ஷன் கிடைத்துள்ளதாம். அதேபோல், இந்தியா முழுவதும் புக்கிங்கில் 65 சதவீதம் ஆக்கிரமித்துள்ளது துணிவு. இந்நிலையில் இதுவரை கிடைத்த தகவலின் படி, துணிவு திரைப்படம் முதல் நாளில் 23 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடரும் வசூல் வேட்டை

தொடரும் வசூல் வேட்டை

துணிவு திரைப்படத்துக்கு முதல் நாளில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. இதனால், பொங்கல் விடுமுறை நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் கேரியரில் இதுதான் தரமான வசூல் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, பிக் பாஸ் அமீர், பாவ்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜித் - ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்ததற்கான சக்சஸ் துணிவு படத்தில் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X