Thunivu Box office day 3: வாரிசுடன் துணிவாக மோதிய அஜித்... பொங்கல் ரேஸில் ரியல் சம்பவம்
சென்னை: அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள துணிவு திரைப்படம் பொங்கல் வெளியீடாக 11ம் தேதி ரிலீஸானது.
விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியக துணிவு களமிறங்கியதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எடிர்பார்ப்பு காணப்பட்டது.
ம்ங்காத்தா படத்துக்குப் பின்னர் அஜித் நெகட்டிவ் ஷேடில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு எதிர்பார்த்ததைவிடவும் மாஸ் ஓபனிங் கிடைத்துள்ளது.
11ம் தேதி நள்ளிரவு 1 FDFS காட்சியுடன் ரிலீஸான துணிவு, பாக்ஸ் ஆபிஸில் ரியல் வின்னராக கலக்கி வருகிறது.

துணிவாக களமிறங்கிய அஜித்
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து அஜித் - ஹெச் வினோத் - போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் துணிவு. வழக்கம் போல பணத்தை பின்னணியாக வைத்து ஹெச் வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தில் அஜித் டார்க் டெவில் என்ற நெகட்டிவ் ரோலில் ந்டித்துள்ளார். கிட்டத்தட்ட மங்காத்தா படத்தில் பார்த்த அஜித்தின் விநாயக் கேரக்டரின் அப்டேட் வெர்ஷனாக துணிவு உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்தப் படம் பொங்கல் போட்டியில் விஜய்யின் வாரிசுடன் கெத்தாக களமிறங்கியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் 3வது நாள்
மியூச்சல் பண்ட், கிரெடிக் கார்டு என வங்கிகளில் நடக்கும் மோசடிகளை டீட்டெய்லாக சொல்ல முயற்சி செய்துள்ளார் வினோத். கதை, திரைக்கதையில் கொஞ்சம் குறைகள் இருந்தாலும் மேக்கிங் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது. முக்கியமாக அஜித்தின் ஒன்மேன்ஷோ ஆட்டம் தான் துணிவு படத்தின் சக்சஸ்க்கு காரணமாக அமைந்துள்ளது. படத்தில் 90 சவதவீதம் காட்சிகளில் அஜித்தை பல வெரைட்டியாக பார்க்க முடிகிறது. அஜித் ரசிகர்களிடம் இது ஒர்க்-அவுட் ஆனதால் பாக்ஸ் ஆபிஸிலும் சூப்பர் கலெக்ஷன் கிடைத்துள்ளது.

விரைவில் 100 கோடி
அஜித்தின் துணிவு திரைப்படத்தின் FDFS நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட்டது. முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் வசூலிலும் நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் நாளில் உலகம் முழுவதும் 39 கோடி ரூபாய் வரை வசூலித்த துணிவு, இரண்டாவது நாளில் 27 முதல் 32 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் மொத்தமாக முத்ல் இரண்டு நாட்களில் 66 முதல் 71 கோடி ரூபாய் வரை வசூலித்ததாம். தொடர்ந்து மூன்றாவது நாளிலும் 10 முதல் 14 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்
முதல் இரண்டு நாட்களில் 70 கோடி வரை வசூல் செய்த துணிவு, மூன்றாவது நாளையும் சேர்த்து மொத்தம் 80 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. முதல் மூன்று நாட்களில் 80 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்ட துணிவு, பொங்கல் விடுமுறைக்குள் 100 கோடி வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











