twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Thunivu: கிளைமேக்ஸ்ல 50 போட்.. 3 ஹெலிகாப்டர சுடுறாரு.. புல்லட் பாய்ந்தும்.. ஏன் அஜித் இப்படி?

    |

    சென்னை: வங்கியில் நடக்கும் நூதன மோசடியை துணிவா சொல்றேன்னு வந்துட்டு இப்படி புல்லட் பாய்ந்தும் 40 கி.மீ., நீச்சல் அடிக்க முடியுமா அஜித் என ரசிகர்கள் துணிவு படத்தை பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அஜித்தின் துணிவு படம் பாக்ஸ் ஆபிஸ் நம்பர் ஒன் பிடித்தாலும் அதுவும் ஒரு ஸ்கேம் தானே என கலாய்த்து வருகின்றனர்.

    தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ரசிகர்களுக்கு லாஜிக்கா ஒரு படம் கூட கொடுக்க முடியாமல் இப்படி ஏமாற்றலாமா அஜித் என நெட்டிசன்கள் துணிவு படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

     துணிவு படமே கிடையாது... அது கிராம சபை கூட்டம்: ப்ளு சட்டை மாறன் விமர்சனம் துணிவு படமே கிடையாது... அது கிராம சபை கூட்டம்: ப்ளு சட்டை மாறன் விமர்சனம்

    வலிமையே பரவாயில்லை

    வலிமையே பரவாயில்லை

    வலிமை படத்தை விட படு மோசமாக துணிவு படத்தின் மேக்கிங் உள்ளதாக நெட்டிசன்கள் 2ம் நாளான இன்று படத்தை பக்கம் பக்கமாக வச்சு செய்து வருகின்றனர். வாரிசு படம் மெகா சீரியல் என அஜித் ரசிகர்கள் கலாய்த்த நிலையில், இது விவேகம் பார்ட் 2 என விஜய் ரசிகர்கள் துணிவு படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

    அஜித் எப்படி ஒத்துக்கொண்டார்

    அஜித் எப்படி ஒத்துக்கொண்டார்

    நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதலில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். அவர் எப்படி இதுபோன்ற க்ளிஷேவான கிளைமேக்ஸ் காட்சிக்கு ஒத்துக் கொண்டார் என்றும் லோகேஷ் கனகராஜ் பாணியில் கிளைமேக்ஸில் பெரிய கன் வைத்து இஷ்டத்துக்கு சுட்டுத் தள்ளினால் தான் வெற்றி கிடைக்கும் என நம்பி விட்டாரா இயக்குநர் எச். வினோத்.

    சென்சிபிளா பேசுனா போதாது

    சென்சிபிளா பேசுனா போதாது

    இயக்குநர் எச். வினோத் துணிவு படத்தின் ரிலீஸை முன்னிட்டு கொடுத்த பேட்டிகளில் தீரன் அதிகாரம் மாதிரி இன்னொரு படம் எடுக்கக் கூடாது என முடிவுடன் இருக்கிறேன் என்றும் அதற்கான காரணமாக வடநாட்டவர்களை பார்த்தாலே பாவரியா கேங் என நினைத்து விட தோணும் என பேசியிருந்தார். ஆனால், இப்படியொரு லாஜிக் இல்லாத படத்தை எப்படி எடுத்தார் என்கிற கேள்வி தான் எழுகிறது என விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    நெஞ்சுல குண்டு பாய்ந்தும்

    நெஞ்சுல குண்டு பாய்ந்தும்

    "கிளைமேக்ஸ்ல 50 படகுகள், 3 ஹெலிகாப்டர்களை அஜித் சுட்டுத் தள்ளுறாரு, நெஞ்சுல குண்டு பாஞ்சும் 40 கி.மீ Swim பண்ணி International Waters வராரு" இப்படியொரு காட்சியில் நடிக்க அஜித் எப்படி சம்மதித்தார் என்றும் இயக்குநர் வினோத்திடம் இருந்து இப்படியொரு படத்தை எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றன்ர்.

    விவேகம் 2

    விவேகம் 2

    அஜித்தின் முதுகில் குத்துவது, காரை கொளுத்தியும் கார் ஓடுவது, மலையில் இருந்து வெடித்து சிதறிய பின்னரும் அஜித்தும் மஞ்சு வாரியரும் தப்பிப்பது எல்லாம் பார்த்தால் ஏய் எப்புர்ரா என்று தான் ரசிகர்களை கேட்கத் தோன்றுகிறது. வங்கியில் நடக்கும் ஸ்கேம் பற்றிய கதை என்றால் அதை டீட்டெய்லிங் செய்து படத்தை பண்ணியிருக்கலாம். தர்ஷன் வரும் காட்சிகளும் சதுரங்க வேட்டை எம்.எல்.எம் காட்சியை காப்பியடித்தது போல இருப்பதாக ட்ரோல்கள் பறக்கின்றன.

    English summary
    Thunivu Climax gets maximum trolled by fans and everyone asks Why Ajith Kumar allow these types of cliches in his movies. Thunivu core plot his a good move but wasted by a funny climax.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X