Don't Miss!
- News
இரட்டை இலை முடங்கினால் கை வண்டி சின்னம்- தேர்தல் ஆணைய லிஸ்ட்டில் புல்லட் இல்லாததால் இபிஎஸ் ப்ளான்!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதலிச்சாலும் ஃபெயிலியராதான் போகுமாம்!
- Finance
Philips கொடுத்த அப்டேட்.. 6000 பேருக்கு பிரச்சனையா.. செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்..!
- Sports
"இவ்வளவு நாளா இது தெரியலையே.. இஷான் கிஷானுக்கு நிறைய விஷயம் தெரியல".. கவுதம் கம்பீர் கடும் விளாசல்!
- Technology
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
தியேட்டர்களில் சவுண்ட் சரியா இருக்காது.. நான் தியேட்டர்ல படம் பார்க்க மாட்டேன்.. எச் வினோத் பேச்சு!
சென்னை: துணிவு படத்தின் இயக்குநர் எச். வினோத் தியேட்டரில் படமே பார்க்க மாட்டேன் என சொல்லி இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஒவ்வொரு இயக்குநருக்கும் தான் இயக்கிய திரைப்படத்தை முதல் நாள் முதல் ஷோ ரசிகர்கள் என்ன ரெஸ்பான்ஸ் கொடுக்கிறாங்க என தியேட்டரில் பார்ப்பதை விரும்பி வரும் நிலையில், வினோத் என்ன வித்தியாசமான மனுஷனா இருக்காரே என பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
மேலும், துணிவு படத்தை நடிகர் அஜித் இன்னமும் பார்க்கவே இல்லை என்றும் அவர் கூறியது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
துணிவு VS வாரிசு... தியேட்டரில் மட்டுமில்ல ஓடிடியிலும் போட்டா போட்டி!

பாராட்டு மழையில் துணிவு
வலிமை திரைப்படம் கடுமையான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் சந்தித்த நிலையில், அஜித்தின் துணிவு திரைப்படம் பாராட்டுக்களை அள்ளி வருகிறது. படத்தின் இரண்டாம் பாதியில் வினோத் செய்த பல நம்ப முடியாத ஸ்டன்ட் காட்சிகளை தவிர்த்து விட்டு கதை ரீதியாக பார்த்தால் வங்கிகளில் நடைபெறும் மோசடி குறித்த விழிப்புணர்வை அவர் துணிவுடன் முன் வைத்திருப்பதற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

வலிமையை கொண்டாடல
வலிமை படத்தில் என்கவுன்டர் செய்யக் கூடாது என்கிற உயரிய கருத்தை படமாக மாற்றி இருந்தேன். ஆனால், அந்த படத்தை யாருமே பெரிதாக கொண்டாடவில்லை என சமீபத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் வருத்தப்பட்டு பேசி இருந்தார் இயக்குநர் எச். வினோத். வலிமை படத்தில் ஏகப்பட்ட டீட்டெய்லிங் இருக்கு அதையெல்லாம் சரியாக ரசித்து இருந்தால் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கும் என ரொம்ப ஃபீல் பண்ணி விட்டார்.

தியேட்டரில் படம் பார்க்க மாட்டேன்
துணிவு படத்தை நீங்க எந்த தியேட்டர்ல போய் பார்த்தீங்க என தொகுப்பாளர் இயக்குநர் எச். வினோத்திடம் கேட்க, நான் தியேட்டர்லலாம் போய் படமே பார்க்க மாட்டேன். தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பது பிடிக்காது என்றும் கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரோல் மெட்டீரியலாக மாறி உள்ளது.

தியேட்டர்களில் கோளாறு
சவுண்ட் மிக்ஸிங் முடிந்து ஸ்டூடியோவிலேயே படத்தை போட்டு பார்த்து விடுவேன். அவ்வளவு தான். எந்தவொரு தியேட்டரிலும் சவுண்ட் சரியா கேட்காது. அதனால், படம் பார்த்த ஃபீலே இருக்காது என இயக்குநர் எச். வினோத் பேசியதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் ஆதரவு
இயக்குநர் வினோத் சொல்வது சரி தான். நிறைய தியேட்டர்களில் சவுண்ட் சரியாவே கேட்காது. படம் பிளர் ஆ இருக்கும். மிக்ஸிங் ஸ்டூடியோவில் பார்க்கும் அனுபவம் இருக்காது என அஜித் ரசிகர்கள் துணிவு பட இயக்குநர் எச். வினோத்துக்கு ஆதரவாக கமெண்ட் போட்டு ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். தியேட்டரில் சென்று படத்தை பார்த்தால் தானே ரசிகர்களின் மனநிலை புரியும் என்றும் தியேட்டர்களில் உள்ள கோளாறுகளை சரி செய்து ரசிகர்களுக்கு தரமான படத்தை கொடுக்க பரிந்துரை செய்யலாமே என்றும் ட்ரோல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

அஜித் படமே பார்க்கல
துணிவு படத்தின் கதையையே நடிகர் அஜித் கேட்கவில்லை என பேசிய இயக்குநர் வினோத் படத்தையும் அவர் பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார். டப்பிங் பணிகளை முடித்து விட்டு அவர் கிளம்பி விட்டார். பைக் டூர் முடித்து விட்டு வந்து பார்ப்பார் என நினைக்கிறேன் என்றும் இயக்குநர் எச். வினோத் தனது பேட்டியில் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.