Don't Miss!
- News
முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி.. அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு வாழ்க கோலம்!
- Sports
அடிதூள்.. ஐபிஎல் 2023 தேதிகள் இதுதான்.. ரசிகர்கள் எதிர்பார்க்காத மெகா மாற்றமும் உண்டு.. முழு விவரம்
- Finance
IBM அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 3900 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
விஜய்யும் அஜித்தும் பெரிய ஸ்டார்ஸ் கிடையாது... துணிவு பட கதையே வேற... ஜிஎம் சுந்தர் ஓபன் டாக்
சென்னை: அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வரவுள்ளன.
ஹெச் வினோத் இயக்கியுள்ள அஜித்தின் துணிவு படத்தில் நடிகர் ஜிஎம் சுந்தர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
ஏற்கனவே அஜித்துடன் வலிமையில் நடித்திருந்த ஜிஎம் சுந்தர் இரண்டாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், துணிவு படம் குறித்து பேசியுள்ள ஜிஎம் சுந்தர், அஜித், விஜய் இருவரை பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.
துணிவு வெற்றிக்காக காத்திருக்கும் தில் ராஜூ... வாரிசு தயாரிப்பாளரே இப்படி பண்ணலாமா?

நேருக்கு நேர் மோதும் விஜய் - அஜித்
2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கோலிவுட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அஜித் நடித்துள்ள துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்குகின்றன. 8 ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித் - விஜய் இருவரது திரைப்படங்களும் பொங்கலுக்கு மோதவுள்ளதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 2023 தொடக்கமே கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் இரண்டு மாஸ் ஹீரோக்களின் யுத்தம் நடைபெறவுள்ளது.

ஜிஎம் சுந்தர் பேட்டி
இந்நிலையில், துணிவு படத்தில் நடித்துள்ள ஜிஎம் சுந்தர் ஒன் இந்தியா சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார். அதில் அஜித்துடன் துணிவு படத்தில் நடித்துள்ள அனுபவங்கள் உட்பட பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார். முதலில் அஜித்துடன் நடித்துடன் அனுபவம் மறக்க முடியாது என்றுள்ள ஜிஎம் சுந்தர், வலிமை ஷுட்டிங் ஸ்பாட்டில் தான் அவரை முதலில் சந்தித்தேன். எப்போதுமே மிக எளிமையாக பழகும் தன்மையுடவர் என புகழ்ந்துள்ளார்.

அஜித் - விஜய் ஆரோக்கியமான போட்டி
துணிவு படப்பிடிப்பின் போது அஜித் சார் அவரது பைக் ரைடிங் பற்றி நிறைய புது தகவல்களை சொன்னதாகவும், அவர் செல்லவுள்ள மற்ற இடங்களை மேப் மூலம் காட்டியதாகவும் கூறியுள்ளார். அதேபோல் துணிவு படத்தின் கதை இதுவரை தமிழ் சினிமாவில் வந்தது கிடையாது, இது ரொம்பவே புதிய கதைக்களம் என ட்வீஸ்ட் வைத்துள்ளார். துணிவு - வாரிசு படங்கள் ஒரேநாளில் ரிலீஸாக உள்ளது பற்றி கேட்டதற்கு, இதை நான் ஆரோக்கியமான போட்டியாகவே பார்க்கிறேன். கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு மக்கள் அதிகம் தியேட்டர் வரவேண்டும் என்றால், இது ஹெல்தியான ஒன்று தான் எனக் கூறியுள்ளார்.

ரெண்டு பேரும் பெரிய ஸ்டார்ஸ் இல்ல
தொடர்ந்து அவரது திரையுலக அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ஜிஎம் சுந்தரிடம், விஜய், அஜித் இருவரில் யார் பெரிய ஸ்டார், யாரின் நடிப்பு பிடிக்கும் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர், விஜய், அஜித் இருவருமே பெரிய ஸ்டார்ஸ் கிடையாது, ஆனால் நல்ல நடிகர்கள். விஜய் பெஸ்ட் டான்ஸர் என்றால், அஜித்துக்கு என ஒரு ஏரியா இருக்கு. அதேபோல் இருவரில் யார் பெஸ்ட் என்றும் சொல்ல முடியாது. நான் இருவரையும் சமமாக தான் பார்க்கிறேன். இவருக்கும் 100 மார்க் கொடுப்பேன் எனக் கூறியுள்ளார்.

விஜய்யுடன் நடிக்க ஆசை
மேலும் இந்தப் பேட்டியில் பொங்கலுக்கு முதலில் துணிவு படம் தான் பார்ப்பேன் எனக் கூறியுள்ள ஜிஎம் சுந்தர், சான்ஸ் கிடைத்தால் விஜய்யுடனும் இணைந்து நடிப்பேன் என்றுள்ளார். அதேபோல், விஜய்யின் வாரிசு அஜித்தின் துணிவு இரண்டு படங்களுமே பொங்கல் ரேஸில் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார். அஜித், விஜய் இருவரையும் ஒரேமாதிரி பார்க்கும் ஜிஎம் சுந்தரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.