பின்னால பேசுறவன் எல்லாம் கிழிஞ்ச டயரு.. துணிவு லிரிக்ஸ் லீக் ஆகிடுச்சு.. சும்மா தீயா இருக்கே!

சென்னை: 'சில்லா சில்லா' என்றதுமே சில்லா இருக்கும் என எதிர்பார்த்தால் செம ஃபயராக அதன் லிரிக்ஸ் இருக்கிறது என சமூக வலைதளங்களில் தற்போது லீக் ஆகி உள்ள துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்ஸ் உரக்க சொல்லி வருகின்றன.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது.

ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள துணிவு படத்தின் 'சில்லா சில்லா' இன்னும் சற்று நேரத்தில் வெளியாக போகிறது.

தெறிக்கும் துணிவு டிரெண்டிங்

தெறிக்கும் துணிவு டிரெண்டிங்

#Thunivufirstsingle மற்றும் #ChillaChilla ஹாஷ்டேக்குகளை போட்டு துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆகப் போவதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். புயல் பாதிப்பை எல்லாம் தாண்டி பெரும் புயலாக துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை சோஷியல் மீடியாவில் தெறிக்கவிட ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர்.

லீக்கான லிரிக்ஸ்

லீக்கான லிரிக்ஸ்

ஏற்கனவே துணிவு படத்தின் 'சில்லா சில்லா' பாடல் மற்றும் இரண்டாவது பாடலான 'காசேதான் கடவுளடா' உள்ளிட்ட பாடல்கள் சோஷியல் மீடியாவில் லீக் ஆகி டிரெண்டாகின. இந்நிலையில், இன்று மாலை வெளியாக உள்ள சில்லா சில்லா பாடலின் சூப்பரான லிரிக்ஸும் தற்போது கசிந்து அஜித் ரசிகர்களை அட்டம் போட வைத்துள்ளது.

பின்னாடி பேசுறவன்

பின்னாடி பேசுறவன்

அஜித் பட பாடல்களில் எப்போதுமே தத்துவம் மற்றும் பஞ்ச் லைன்கள் தான் லிரிக்ஸாக இருக்கும் என்பது தெரிந்தது தான். அதற்கு கேற்றார்போல பாடலாசிரியர் வைசாக் வரிகளில் உருவாகி உள்ள பாடல் வரிகள் கசிந்துள்ளன. "உள்ளுக்குள்ள ஃபயரு.. தெறிச்சு ஓடும் ஃபியரு.. பின்னாடி பேசுறவன் எல்லாம் கிழிஞ்ச டயரு" என ஆட்டம் போடும் தத்துவ வரிகளை எழுதியுள்ளார்.

அடுத்த ஆலுமா டோலுமா

அடுத்த ஆலுமா டோலுமா

வேதாளம் படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் அஜித் ரசிகர்களை தாண்டி அனைத்து ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்தது. திருமண வீடுகள் தொடங்கி, பார்ட்டி, பப் என அனைத்து இடங்களிலும் அந்த பாடல் இன்றும் அமர்க்களம் செய்து வரும் நிலையில், சில்லா சில்லா பாடல் அடுத்த ஆலுமா டோலுமாவாக மாறுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X