Don't Miss!
- Education
NAAN MUDHALVAN SHORT FILM FESTIVAL 2023:குறும்பட திருவிழா போட்டியில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம்...!
- News
தூய்மை பணியாளர்களுக்கு விருந்து! எல்லோருக்கும் பிரியாணி பரிமாறிவிட்டு ரசம் ஊற்றி சாப்பிட்ட ஆ.ராசா!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
எல்லா டிக்கெட்டும் வித்தாச்சு.. முறையிட்ட தியேட்டர் ஓனர்கள்.. துணிவு நள்ளிரவு காட்சிக்கு அனுமதி!
சென்னை: நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் நள்ளிரவு 1 மணி சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. இந்நிலையில், தற்போது அந்த சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படம் நாளை வெளியாகிறது. அதன் சிறப்பு காட்சி நள்ளிரவு 1 மணிக்கே பல திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரியில் துணிவு படத்தின் நள்ளிரவு 1 மணி சிறப்பு காட்சியை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருந்தார்.
வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை.. தமிழ்நாடு அரசு உத்தரவு.. டிக்கெட் விலைக்கும்!

துணிவுடன் வரும் அஜித்
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் சொதப்பிய நிலையில், துணிவுடன் மீண்டும் ரசிகர்களுக்காக வர காத்திருக்கிறார் நடிகர் அஜித். இந்த முறை மிஸ்ஸே ஆகாது என்பது போல இயக்குநர் வினோத் ஏகப்பட்ட பேட்டிகளை கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

மிட் நைட் ஷோ
விஜய்யின் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு நாளை வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அஜித் தரிசனம் தான் ரசிகர்களுக்கு என்பது போல மிட் நைட் 1 மணிக்கே துணிவு படத்தை திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான டிக்கெட்டுகள் மட்டுமின்றி நாளைய தினத்துக்கே மொத்தமாக டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

2000 ரூபாய்
அஜித்தின் துணிவு படத்தின் நள்ளிரவு 1 மணி காட்சிக்கான டிக்கெட்டுகள் 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2000 ரூபாய் வரை விற்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிக விலை கொடுத்தாவது முதல் நாள் முதல் ஷோவே அஜித்தை பார்த்து விட வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அரசு எச்சரிக்கை
ஜனவரி 13 முதல் 16 வரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என அரசு உத்தரவிட்டது. மேலும், பாலாபிஷேகம் செய்யக் கூடாது என்றும் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பல திரையரங்குகள் அதனை கடைபிடிப்பதாக தெரியவில்லை.

நள்ளிரவு காட்சி ரத்து
புதுச்சேரியில் நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் நள்ளிரவு காட்சியை ரத்து செய்தனர். அதிகாலை 5 மணிக்கு திரையிட மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் ஏற்கனவே முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக முறையிட்ட நிலையில், நள்ளிரவு காட்சிக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.