twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'Thunivu' Public Review : துணிவு படம் எப்படி இருக்கு?? பொதுமக்கள் விமர்சனம்!

    |

    சென்னை : எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள மூன்றாவது படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் அஜித் உடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொகேன், பிரேம், சிபி சந்திரன், பாவனி, அமீர் என பலர் நடித்துள்ளனர்.

    நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் அனல் பறக்க பறக்க இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இப்படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் லைகா நிறுவனமும் வெளியிட்டுள்ளது..

    துணிவு படத்தை பார்த்த பொதுமக்கள் தங்களது கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் என்ன சொன்னார்கள் என்று பார்க்கலாமா?

     என்ன ஒரு அராஜகம்.. போலீஸ்காரரையே எதிர்த்து தள்ளிய அஜித் ரசிகர்கள்.. துணிவு FDFS சேட்டைகள்! என்ன ஒரு அராஜகம்.. போலீஸ்காரரையே எதிர்த்து தள்ளிய அஜித் ரசிகர்கள்.. துணிவு FDFS சேட்டைகள்!

    நல்ல மெசேஜ்

    நல்ல மெசேஜ்

    பட்டாசை கொளுத்திப்போட்டால் எப்படி வெடிக்குமோ அப்படி படம் முழுவதும் வெடித்து இருக்கிறார் அஜித். படத்தின் முதல் பாதி சும்மா மிரட்டலாக இருந்தது. இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பேமிலி ஆடியன்சுக்கும் ரொம்ப பிடிக்கும்.படத்தில் நல்ல மெசேஜ் சொல்லி இருக்காங்க, பேங்க் போனதும், எதையும் படிச்சி பார்க்காமல் கையெழுத்து போடுகிறோம் இதனால், என்னென்ன பாதிப்பு ஏற்படுகிறது, கிரெடிட் கார்டு, மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் நடக்கும் முறைகேடுகளை தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

    எச் வினோத் செஞ்சிட்டாரு

    எச் வினோத் செஞ்சிட்டாரு

    அஜித் தாறுமாறாக நடித்து இருக்கிறார், படம் சூப்பர், பேங்கில் நடக்கும் முறைகேடுகள் பற்றி வச்சி செஞ்ட்சிட்டாங்க. மற்ற அஜித் படங்கள் போல் இல்லாமல் புதிதாக இருக்கிறது. இரண்டாம் பாதி ஜெனரல் ஆடியன்ஸுக்கு ரொம்ப பிடிக்கும், துணிவு கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான். டிரைலரில் பார்த்ததை விட படம் மிரட்டலா இருக்கு.

    தரமான சீன்

    தரமான சீன்

    துணிவு படம் பீஸ்ட் காப்பி, மணி ஹெய்ஸ்ட காப்பி என்று சொல்றாங்க, பேங்கை கொள்ளை அடிச்சாலே மணி ஹெய்ஸ்ட் காப்பி என்றால், அப்போ குடும்ப செண்டிமென்ட் படும் எடுத்தால் விஸ்வாசம் என்று சொல்லட்டுமா, அஜித்தின் கிளைமாக்ஸ் எண்ட்ரி சீன் தரமா இருக்கு, வலிமை படத்தை விட இந்த படம் சூப்பராக இருக்கு

    ஒன் மேன் ஷோ

    ஒன் மேன் ஷோ

    துணிவு படத்தின் ஒவ்வொரு சீனும் சூப்பர், ஒவ்வொரு காட்சியையும் அஜித் செதுக்கி இருக்கிறார். வெள்ளை நிற காஸ்ட்யூம், தாடி, தலைமுடி என சும்மா ஸ்மார்ட் லுக்கில் மிரட்டி இருக்கிறார் அஜித். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை எல்லாமே அஜித் தான். ஒன் மேன் ஷோவாக படம் நெடுங்கிலும் ஜாலி கலந்த வில்லத்துடன் அசத்தி உள்ளார் அஜித்.

    விறுவிறுப்பு குறையவில்லை

    விறுவிறுப்பு குறையவில்லை

    மனுச ஏன் சுயநலமா இருக்கான். சுயநலமா இருக்கறதால தான் அவன் மனுசனாவே இருக்கான் என்ற உண்மையில் ரசிக்கும்படி இருக்கு, ஜிப்ரான் பிஜிஎம்பில் தெரிக்கவிட்டு இருக்கிறார். மங்காத்தா படத்தில் பார்த்த அஜித் மீண்டும் நம் கண்முன் வந்துள்ளார். முதல் பாதியில் தொடங்கிய விறுவிறுப்பு இறுதிவரை குறையாவே இல்லை.

    English summary
    Thunivu Public Review (துணிவு படம் எப்படி இருக்கு..பொதுமக்கள் விமர்சனம்): Check out the Expecatation and Audience Response on Ajith Kumar's Thunivu Movie Which is Released Today in Screens.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X