Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
’வா பதிலடிதான் தெரியுமடா.. உனக்கு சம்பவம் இருக்கு’.. துணிவு 3வது சிங்கிள் ‘கேங்ஸ்டா’ ரிலீஸ்!
சென்னை: அஜித்தின் துணிவு படத்தின் 3வது சிங்கிளான கேங்ஸ்டா பாடல் வெளியானது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள இந்த கேங்ஸ்டா பாடல் AK ஆந்தமாக உருவாகி உள்ளது.
அஜித்தின் மிரட்டலான கேங்ஸ்டர் லுக் இந்த பாடலை ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக தியேட்டரில் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
படம் முடிந்தவுடன் வரும் பாடலாக இருக்குமா? அல்லது வங்கி கொள்ளையில் ஈடுபடும் போது இடம்பெறுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
OTT: அடேங்கப்பா.. அஜித்தின் துணிவு படம் ஓடிடி ரிலீஸுக்கு பெரிய தொகைக்கு விலை போயுள்ளதா?

வெளியானது கேங்ஸ்டா
அஜித் ரசிகர்களுக்கு ஏகே ஆந்தமாக வெளியாகி உள்ளது துணிவு படத்தின் 3வது சிங்கிளான கேங்ஸ்டா பாடல். ஜிப்ரான் வெறித்தனமாக இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். ஷபீர் சுல்தான் மற்றும் விவேகா வரிகள் எழுத ஷபீர் சுல்தான் மற்றும் ஜிப்ரான் இணைந்து இந்த அனல் பறக்கும் கேங்ஸ்டா பாடலை பாடி உள்ளனர்.

எதிர்க்கும் வரிகள்
நடிகர் விஜய்யின் வாரிசு படம் போட்டியாக வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், துணிவு படத்தின் 3வது சிங்கிள் பாடல் வரிகள் எல்லாமே எதிர்க்கும் வரிகள் போலவே இடம்பெற்றுள்ளதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. 'வா பதிலடிதான் தெரியுமடா.. உனக்கு சம்பவம் இருக்கு' உள்ளிட்ட வரிகளை சில தினங்களுக்கு முன்பாக போனி கபூர் வெளியிட்ட போதே இந்த பிரச்சனை கிளம்பியது.

செம சவுண்ட்
வரிகள் எல்லாம் அதிகளவில் கேட்காமல் அதிக சவுண்ட் உடன் இந்த பாடல் உருவாக்கப்பட்ட நிலையில் தான் முன்னாடியே லிரிக்ஸை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள் என போனி கபூர் ட்வீட் போட்டாரா என்றும் அப்படியே பாடலை வெளியிட்டு இருந்தால் ஒருத்தருக்கும் லிரிக்ஸ் கேட்டு இருக்காது என ட்ரோல்களும் கிளம்பி உள்ளன.

அஜித் வெறித்தனம்
அனிமேஷனில் அஜித் கையில் துப்பாக்கியுடன் சுட்டுத் தள்ளும் காட்சிகள் எல்லாம் படத்தில் இருந்தால் வேறலெவல் வெறித்தனம் என்பது கன்ஃபார்ம். கடைசியாக அஜித் அங்கே அமர்ந்திருக்கும் அந்த ஒரு ஷாட்டே அஜித் ரசிகர்களுக்கு செம கூஸ்பம்ப்ஸ் மொமண்ட் கொடுத்துள்ளது. கல்யாண் மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்து ஆடியும் உள்ளாரா? என்கிற கேள்விகளையும் லிரிக் வீடியோ எழுப்பி உள்ளது.

ரெக்கார்டுகளை உடைக்குமா
வாரிசு பட பாடல்களில் ரெக்கார்டுகளை யூடியூபில் இதுவரை வெளியான துணிவு பாடல்கள் முறியடிக்காத நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை, ஞாயிறு விடுமுறை என டார்கெட் செய்து முன் அறிவிப்புடன் வெளியாகி உள்ள இந்த பாடல் மிகப்பெரிய ரெக்கார்டு படைக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.