Don't Miss!
- News
சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாரிசு ட்ரெய்லருக்குப் போட்டியாக துணிவு ரிலீஸ் தேதி அப்டேட்... அஜித் ரசிகர்கள் வெறித்தனம்
சென்னை: எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் - விஜய் திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகின்றன.
அஜித் நடித்துள்ள துணிவு ட்ரெய்லர் டிசம்பர் 31ம் தேதி வெளியான நிலையில், விஜய்யின் வாரிசு ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
வாரிசு ட்ரெய்லர் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் நிலையில், தற்போது துணிவு ரிலீஸ் தேதி ஹேஷ்டேக்கும் டிவிட்டரை கலக்கி வருகிறது.
ஹாட் சீட்.. பவர்.. வாரிசு ட்ரெய்லரில் ஹெவியாக அடிக்கும் அரசியல் வாடை.. அனல் பறக்கும் விவாதம்!
வாரிசு ட்ரெய்லருக்குப் போட்டியாக துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை போனி கபூர் அறிவித்து அதிரடி காட்டியுள்ளார்.

ட்ரெண்டிங்கில் வாரிசு ட்ரெய்லர்
விஜய்யின் வாரிசு ட்ரெய்லர் தற்போது வெள்யாகி டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறாது. வழக்கம் போல விஜய் - அஜித் ரசிகர்கள் யார் கெத்து என்ற மோதலில் களமிறங்கியுள்ளனர். வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், எஸ்ஜே சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், வாரிசு படத்தின் ட்ரெய்லருக்குப் போட்டியாக துணிவு ரிலீஸ் தேதி அப்டேட்டை கொடுத்து அதிரடி காட்டியுள்ளார் போனி கபூர்.

துணிவு ரிலீஸ் தேதி
அதன்படி துணிவு திரைப்படம் வரும் 11ம் தேதி ரிலீஸாகிறது. இதனை தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார் போனி கபூர். துணிவு ரிலீஸ் தேதி திடீரென அறிவிக்கப்பட்டுள்ளதால் இதனை அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக செலிப்ரேட் செய்து வருகின்றனர். வாரிசு ட்ரெய்லர் வெளியான சில மணி நேரத்தில் துணிவு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் சோஷியல் மீடியாவே ரணகளமாக காணப்படுகிறது. இதனிடையே வாரிசு ட்ரெய்லரில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாரிசு ரிலீஸ் தேதி எப்போது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

வியாழன் சென்டிமெண்ட் நோ
சாய் பாபா பக்தரான அஜித், தனது திரைப்படங்களின் அப்டேட், ரிலீஸ் தேதி என அனைத்துமே வியாழன் கிழமையில் இருப்பதையே விரும்புவார். ஆனால், துணிவு ட்ரெய்லர் சனிகிழமை வெளியான நிலையில், இப்போது படத்தின் ரிலீஸ் தேதியும் புதன் கிழமையில் வருகிறது. முதலில் ஜனவரி 12ம் தேதி தான் துணிவு ரிலீஸாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஒருநாள் முன்னதாக ரிலீஸாகிறது. ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள துணிவு, அஜித் ரசிகர்களுக்கு பேன் பாய் சம்பவமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, பொங்கல் ரிலீஸ் என அறிவித்திருந்தது படக்குழு. அதேபோல் ஃபர்ஸ்ட் சிங்கிளும் சீக்கிரமாகவே வெளியாகி இருந்தது. ஆனால் அதன் பின்னர் வேகமெடுத்த துணிவு டீம், ட்ரெய்லர், ரிலீஸ் தேதி என மாஸ் அப்டேட்களை முதல் ஆளாக வெளியிட்டு வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும், மங்காத்தா படத்திற்கு பின்னர் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளது இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.