Don't Miss!
- News
லகலகலக.. திடீரென மெட்ரோ ரயிலில் ஏறிய 'சந்திரமுகி'.. பயந்து ஓடிப்போன பயணிகள்.. இது ஒரு கலகலகல வீடியோ!
- Lifestyle
பெற்றோர்களே! உங்க குழந்தை அறிவாளியாகவும் சிறந்தவர்களாகவும் வர நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
- Finance
வெயிட்டிங்.. ஏறுமா ஏறாதா.. நைகா நிறுவன முதலீட்டளார்கள் எதிர்பார்ப்பு.. நிபுணர்களின் செம ரிப்போர்ட்!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. நியூசி,-ன் அதிவேக பவுலரை அசால்ட் செய்த சுப்மன் கில்.. வாயடைத்துப்போன ரோகித்
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
Thunivu Trailer: தாறுமாறு.. கேங்ஸ்டரா வருவாருன்னு பார்த்தா மான்ஸ்டரா வந்துருக்காரே.. துணிவு டிரைலர்!
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படத்தின் தாறுமாறான டிரைலர் சற்று முன் வெளியானது. போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன், அமீர், பாவனி, சிபி, பிரேம், ஜிபி முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதன் முதலாக பிங்க் படத்தை ரீமேக் செய்து தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் அஜித்.
இந்த ஆண்டு இதே கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் சரிவை சந்தித்தது. இந்நிலையில், வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள துணிவு திரைப்படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்பதை தற்போது வெளியாகி உள்ள வெறித்தனமான துணிவு டிரைலர் உறுதிபடுத்தி உள்ளது.
அதிரடியாக ரிலீஸாகும் துணிவு ட்ரெய்லர்... கலக்கத்தில் வாரிசு டீம்... அஜித் கேரக்டர் தான் மேட்டரா?

அஜித்தின் துணிவு
வலிமை படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்த போதும் ஏற்கனவே விவேகம் படத்திற்கு பிறகு மீண்டும் சிவாவை நம்பி விஸ்வாசம் படம் கொடுத்து வெற்றி பெற்றாரோ அதே போல இந்த முறையும் ஹெச். வினோத் மீது நம்பிக்கை வைத்து துணிவு படத்தை எடுக்க அனுமதித்துள்ள அஜித்தின் துணிவை ரசிகர்கள் பாராட்டி வந்த நிலையில், தனக்கு கிடைத்த வாய்ப்பை இயக்குநர் ஹெச். வினோத் சரியாக கையாண்டுள்ளதாகவே தெரிகிறது.

மிஸ் ஆகாது
நெகட்டிவ் ஷேடில் நடிகர் அஜித் நடித்த படங்கள் பெருமளவில் ஹிட் அடித்துள்ள நிலையில், இந்த துணிவு படமும் கன்ஃபார்மா ஹிட் அடிக்கும் என்றும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி இந்த முறை மிஸ் ஆகாது என்கிற ரீதியில் டிரைலரின் முதல் ஃபிரேம் முதல் கடைசி ஃபிரேம் வரை சும்மா தாறுமாறு கட்ஸ் உடன் தெறிக்கவிடுகிறது.

மான்ஸ்டர் அஜித்
கேங்ஸ்டராக அஜித் வருவார் இந்த படத்தில் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு அதை விட மான்ஸ்டராக அஜித் தனது நடிப்பால் காட்சிக்கு காட்சி மிரட்டி இருப்பது அஜித் ரசிகர்களை காலரை தூக்கி விட்டு கெத்துக் காட்ட வைத்துள்ளது. வரும் பொங்கல் துணிவு பொங்கல் தான் என்றே கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

பொங்கல் ரேஸ்
இந்த பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு படத்தை அஜித்தின் துணிவு படம் தூக்கி சாப்பிடுமா என்கிற கேள்விக்கு சரியான பதிலை துணிவு படத்தின் டிரைலர் கொடுத்து மிரட்டி உள்ளது. வாரிசு படத்தின் டிரைலரும் விரைவில் வெளியானால் யார் இந்த பொங்கல் வின்னர் என இப்பவே சொல்லி விடலாம் என ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர்.

என்னமாறி அயோக்கிய பய
இல்லை என மாஸ்க்கை கழட்டி விட்டு அஜித் சிரிப்பதில் தொடங்கி, என்னை மாறி ஒரு அயோக்கிய பையன் மேல கை வைக்கலாமா என பேசும் காட்சி என துணிவு டிரைலரில் வலிமை படத்தில் இருந்து அப்படியே டோட்டலாக சேஞ்ச் ஆகி நடித்திருக்கிறார் நடிகர் அஜித். வங்கியை கொள்ளையடித்து அங்கே அவர் நடனமாடும் காட்சி எல்லாம் வேறலெவல் வெறித்தனம்.

மாஸ் காட்டும் மஞ்சு வாரியர்
நடிகர் அஜித்துடன் இனைந்து கொண்டு நாயகி மஞ்சு வாரியர் ஸ்டண்ட் காட்சிகளில் எல்லாம் தெறிகக்விட்டுள்ளார். போலீஸ் அதிகாரியாக சமுத்திரகனி பேசும் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. வங்கி ஓனராக ஜான் கொக்கன் நடித்துள்ளார். நேற்று அறிமுகம் செய்த அத்தனை நடிகர்களும் இந்த டிரைலரில் இடம்பிடித்துள்ளனர்.