»   »  இன்று துப்பறிவாளன், நாளை மகளிர் மட்டும்!

இன்று துப்பறிவாளன், நாளை மகளிர் மட்டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று வியாழக்கிழமை விஷால் நடித்த துப்பறிவாளன் படம் வெளியாகிறது. நாளை வெள்ளிக்கிழமை ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் படம் வெளியாகிறது.

துப்பறிவாளன் படம் விஷாலுக்கு மிக முக்கியமானது. காரணம் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்ற அமைப்புகளின் உயர் பதவிகளைப் பிடித்த விஷால், இதுவரை பெரிய வெற்றிப்படம் எதையும் தரவில்லை. பாண்டிய நாடுக்குப் பிறகு சொல்லிக் கொள்கிறமாதிரி படமே அவருக்கு அமையவில்லை என்பதே உண்மை.

Thupparivalan releasing today

அந்த குற்றச்சாட்டை துப்பறிவாளன் மூலம் துடைக்க முயற்சித்துள்ளார் என்கிறார்கள். மிஷ்கின் இயக்கியுள்ள இந்தப் படம், ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் போல துப்பறியும் வகைப் படம்.

பெரிய ஓபனிங் வேண்டும் என்பதற்காக ஒரு நாள் முன்பாக இன்று ரிலீஸ் செய்துள்ளனர்.

மகளிர் மட்டும்

மகளிர் மட்டும் படம் முழுக்க பெண்கள் படம். ஹீரோ என யாரும் இல்லை. நாசர், லிவிங்ஸ்டன் என துணைப் பாத்திரங்கள் மட்டுமே. இந்தப் படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

English summary
Vishal's Thupparivalan and Jyothika's Magalir Mattum are releasing this week

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil