Don't Miss!
- Technology
கூகுளையே தூக்கிச் சாப்பிடும் 'ChatGPT' என்றால் என்ன? பள்ளி, கல்லூரிகளில் தடை செய்வது ஏன்?
- News
ஊழியர்களுக்கு போனஸ்.. போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு.. பணத்தை அள்ளி வீசிய சீன நிறுவனம்!
- Sports
உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளுக்கு டிராவிட் தந்த கவுரவம்.. இந்திய வீரர்களின் நெகிழ்ச்சி செயல்
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Lifestyle
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Finance
தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது.. அதானி பற்றி ஹிண்டன்பர்க் ரிசர்ச்..!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
65 நாட்கள்.. 40 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம்… 'துரிதம்'… ஓர் உண்மை கதை!
சென்னை : அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் துரிதம். இப்படம் ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் சண்டியர் படத்தில் நடித்த ஜெகன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார்.
நரேஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார்.
ஒரு லட்ச ரூபாய் அபராதம், விமர்சனத்தை நீக்க பல லட்சம் செலவு செய்த விஜய்.. தீர்ப்பின் முக்கிய தகவல்கள்

துரிதம்
தமிழ் சினிமாவில் இதுவரை பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை. ஆனால் முதன்முறையாக அந்தக்குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் துரிதம்.

65 நாட்கள், 40 ஆயிரம் கிலோ மீட்டர்
கதையின் நம்பகத்தன்மைக்காக தமிழ்நாட்டில், அதுவும் கதை நிகழும் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கே பயணப்பட்டு மொத்த படப்பிடிபையும் நடத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 65 நாட்கள் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக தமிழகத்துக்குள்ளேயே 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து சாலைகளில் மட்டுமே பெரும்பாலான காட்சிகளின் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் கதை விறுவிறுப்பாக நகரும் விதமாக இருப்பதால் படத்திற்கு 'துரிதம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

உண்மை சம்பவம்
அனைவருமே தாங்கள் செய்யும் விஷயங்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் சரி என்பது போலத்தான் தெரியும். ஆனால் அடுத்தவர்கள் பார்வையில் அது தவறாக தெரிய வாய்ப்பு உண்டு. இந்த கருத்தை மையப்படுத்தி உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் துரிதம்.

இயக்குனர் சீனிவாசன்
துரிதம் திரைப்படத்தை இயக்குனர் சீனிவாசன் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் ஹெச்.வினோத்தின் படங்களில் உதவியாளராக பணியாற்றி உள்ளார். தனது குருவை போலவே இந்தப்படத்தை விறுவிறுப்பு குறையாமல் இயக்கியுள்ளார். ஜெகன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஈடன் நடித்துள்ளார். புதியவரான நரேஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.