பொன்னியின் செல்வன் சாதனையை முறியடிக்கும் பதான்... பாய்காட் ட்ரோல் எல்லாம் பொய்யா கோபால்?
பெர்லின்: ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் நடித்துள்ள பதான் திரைப்படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பதான், ஷாருக்கான் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் இருந்து வெளியான 'பேஷ்ரம் ரங்' பாடலில் தீபிகா படுகோன் காவி நிற பிகினியில் படு கிளாமராக ஆட்டம் போட்டிருந்தார்.
இதனால் பதான் திரைப்படத்துக்கு எதிராக பாய்காட் பிரசாராம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் ரிலீஸுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கானின் பதான்
பாலிவுட் பாட்ஷா, சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான் தற்போது பதான் படத்தில் நடித்து முடித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பதான், வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோனேவும் வில்லனாக ஜான் ஆபிரஹாமும் நடித்துள்ளனர். ஷாருக்கான் ரகசிய உளவாளியாக நடித்துள்ள பதான் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது.

நெட்டிசன்கள் பாய்காட்
2018ம் ஆண்டுக்குப் பிறகு ஷாருக்கான் நடித்துள்ள பதான் ரிலீஸாவதால் பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், பதான் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த 12ம் தேதி வெளியானது. அதில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன் கவர்ச்சியாக ஆட்டம் போட்டிருந்தார். ஆனால், தீபிகா காவி நிறத்தில் பிகினி அணிந்திருந்ததால் அது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதனால் மத்திரபிரதேச மாநிலம் இந்தூர், குஜராத் மாநிலம் அஹமதாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் பஜ்ரங்தள அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் நெட்டிசன்களும் பாய்காட் பதான் என ட்ரோல் செய்து வந்தனர்.

டிக்கெட் புக்கிங்கில் சாதனை
ஏற்கனவே கடந்தாண்டு வெளியான சில இந்தி படங்கள் பாய்காட் பிரச்சினையில் சிக்கி படுதோல்வியடைந்தன. அதனால் பதான் படத்தின் வசூலும் பாதிக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால், அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கிலேயே அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறது பதான். முக்கியமாக கேஜிஎஃப், பொன்னியின் செல்வன் படங்களின் மொத்த வசூலையும் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் மூலம் முறியடித்துள்ளது பதான். இந்த சாதனையெல்லாம் ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஷாருக்கான் ரசிகர்கள் உற்சாகம்
கடந்தாண்டு ரிலீஸான கேஜிஎஃப் இரண்டாம் பாகம் ஜெரமனியில் 144 ஆயிரம் யூரோ கலெக்ஷன் செய்திருந்தது. அதேபோல், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐரோப்பா நாடுகள் முழுவதும் 155 ஆயிரம் யூரோ கலெக்ஷன் செய்திருந்தது. இந்த இரண்டு சாதனைகளை பதான் திரைப்படம் அட்வான்ஸ் புக்கிங் மூலமே முறியடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, பதான் அட்வான்ஸ் புக்கிங் மட்டும் இதுவரை 150 ஆயிரம் யூரோக்கு நடந்துள்ளதாம். இதனால் பதான் படக்குழுவினரும் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். ரிலீஸுக்கு பின்னர் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











