Don't Miss!
- News
‛111’ போதாது.. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 6 புதிய பொறுப்பாளர்கள்.. டப் கொடுக்கும் எடப்பாடி-லிஸ்ட்
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கல்யாணத்துக்கு நோ.. திஷா படானிக்கு டாட்டா காட்டிய டைகர் ஷெராஃப்.. அதுதான் காரணமா?
மும்பை: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மற்றும் பாலிவுட் நடிகை திஷா படானி இருவரும் பிரேக்கப் செய்து விட்டதாக பாலிவுட்டில் பரபரப்பாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிகில் படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்பின் மகன் தான் டைகர் ஷெராஃப்.
ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வரும் டைகர் ஷெராஃப், பாலிவுட்டின் ஹாட் குயின் திஷா பதானி உடன் பல ஆண்டுகள் லிவிங் டுகெதரில் இருந்து வந்த நிலையில், சமீப காலமாக இருவரும் பேசிக் கொள்வதோ, சந்தித்துக் கொள்வதோ இல்லை என்கின்றனர்.
வெயிட்டிங்களயே
வெறி
ஏறுதே...நாளை
பொன்னியின்
செல்வன்
இசை
பயணம்
ஆரம்பம்

நெருக்கமான காதல்
பாகி வரிசை படங்கள், வார் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்திய நடிகர் டைகர் ஷெராஃப், எம்.எஸ். தோனி பயோபிக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான திஷா பதானியுடன் காதலில் விழுந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தது. இரு வீட்டாருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த பாலிவுட்டுக்கும் தெரிந்த விஷயம் தான். பல இடங்களில் இருவரும் நெருக்கமாக வந்து சென்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் டிரெண்டாகின.

ஒன்றாக குடித்தனம்
அப்பா ஜாக்கி ஷெராஃப் மற்றும் அம்மா ஆயிஷா தங்கியிருக்கும் வீட்டை விட்டு மும்பையில் தனியாக குடியிருப்பு ஒன்றை வாங்கி தங்கி வந்த டைகர் ஷெராஃப் உடனே நடிகை திஷா பதானி லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் ஒரே வீட்டில் இருந்து கொண்டு ஏகப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். பாகி 2 படத்தில் ஜோடியாக நடித்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

கழட்டிவிட்ட காதலன்
விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என நடிகர் ஜாக்கி ஷெராஃப் எல்லாம் பேட்டியளித்த நிலையில், திடீரென தற்போது திஷா பதானி மற்றும் டைகர் ஷெராஃப் இடையே பிரேக்கப் ஆகிவிட்டதாக பாலிவுட் முழுக்க பரபரப்பான பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. இதற்கு முழுக் காரணமும் டைகர் ஷெராஃப் தான் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதுதான் காரணமா
இருவரும் காதலித்து வரும் விஷயம் வெளியே தெரிந்து விட்ட நிலையில், கடந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ளலாம் என திஷா பதானி டைகர் ஷெராஃப்பை நெருக்கி உள்ளார். ஆனால், அதற்கு அவர் நோ சொல்லி விட்டார். இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் திஷா பதானி திருமண பேச்சு எடுக்க, நமக்கு கல்யாணம் செட் ஆகாது. நான் இன்னும் அதற்கு தயாராகவில்லை என டைகர் ஷெராஃப் சொன்னது தான் இந்த பிரேக்கப்புக்கு காரணம் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. ஆனால், இதுதொடர்பாக இருவரும் எந்தவொரு அதிகாரப்பூர்வ கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை. பிரேக்கப் வதந்தி என்றும் மறுக்கவும் இல்லை.

இருவரும் பிசி
அர்ஜுன் கபூருடன் திஷா பதானி நடித்த ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் படம் முதல் நாளில் 7.5 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதை கொண்டாடிய திஷா பதானி ரசிகர்களுக்கு ஸ்வீட் கொடுத்த வீடியோக்களும் வெளியாகி உள்ளன. அதே நேரம், நடிகர் டைகர் ஷெராஃப், ஸ்க்ரூ திலா, படே மியான் சோட்டே மியான் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடித்த ஹீரோபன்டி திரைப்படம் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.