Baaghi 4 X Review : டைகர் ஷெராஃப் நடித்த பாகி 4.. ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: டைகர் ஷெராஃப் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் பாகி 4. மிலாடி நபி பொது விடுமுறையை முன்னிட்டு இன்று இப்படம் தியேட்டரில் வெளியானது. ஹர்ஷா இயக்கிய இப்படம், 23 கட்டுகளுடன் மத்திய தணிக்கை குழு இப்படத்திற்கு 'A' சான்றிதழை வழங்கியது. இப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

பாகி 4 படத்தை பார்த்த இணையவாசி ஒருவர், பாகி 2ல் தீவிரத்தை விஞ்சும் அளவிற்கு இரத்தமும், வன்முறையும், மனதைக் கவரும் திருப்பங்களும் நிறைந்த ஒரு அதிரடித் திரில்ல திரைப்படமாக உள்ளது. டைகர் ஷெராஃப் ரோனியாக இதற்கு முன் கண்டிராத ஒரு தீவிரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சஞ்சய் தத்தின் வன்முறை மிக்க வில்லன் பாத்திரத்துடன் அவர் மோதும் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. இந்த திரைப்படம் அதிரடி விரும்பிகளுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும் என பதிவிட்டுள்ளார்.

Tiger Shroff Baaghi 4 Review 4
Photo Credit:

அதிரடி சண்டை: மற்றொரு பயனர், "வன்முறை, அதிகபடியான சத்தம், மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் உள்ளன. யதார்த்தத்தை விட விசில் சத்தங்கள் மற்றும் கைதட்டல்களை பார்க்க விரும்பும் நபராக நீங்கள் இருந்தால், இது உங்களுக்கான படம் என்று குறிப்பிட்டார். மேலும், அதிரடி, ரத்தம், சத்தம் என படம் முழுக்க ஒருவிதமான பதற்றமாக உள்ளது. ஆனால், படத்தின் முதல் பாதி குழப்பத்துடன் சென்றாலும், கதையின் கடைசியில் வித்தியாசமான ஒரு கதை உள்ளது. திருப்பங்கள் நிறைந்த மற்றும் உணர்ச்சிபூர்வமான இந்த கதையாக இருந்தாலும், இது ஒரு வழக்கமான காதல் கதை அல்ல... இது ஒரு பைத்தியக்காரத்தனமான காதல் என குறிப்பிட்டுள்ளார்.

பல காட்சிகள் இல்லை: மற்றொரு இணையவாசி, "ஒரு சாதாரண திரைப்படத்தை மத்திய தணிக்கை குழு முற்றிலுமாக அழித்துவிட்டது. டீஸர் மற்றும் டிரெய்லரில் காட்டப்பட்ட உண்மையான வன்முறை காட்சிகள் அனைத்தும் தணிக்கை குழுவால் வெட்டப்பட்டுள்ளது. இது படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பலவீனமான இசை திரைப்படத்தை மேலும் பலவீனமாக்கி உள்ளது. 'மர்ஜானா' என்ற ஒரு அற்புதமான பாடல் இருந்தும், அதில் ஒரு சில வரிகளை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முழுமையான அதிரடித் திரைப்படத்திற்குப் பதிலாக, சில அதிரடி காட்சிகளைக் கொண்ட காதல் கதையாக இதை உருவாக்கியுள்ளனர்.

முதல் நாள் வசூல்: சஞ்சய் தத்தின் கதாபாத்திரம், ஒரு நீட்டிக்கப்பட்ட கேமியோ ரோல் போல உள்ளது. நதியத்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் சஜித் நதியத்வாலா தயாரித்த இந்தத் திரைப்படத்தில், முன்னணி நடிகருடன் சஞ்சய் தத், ஹர்னாஸ் கவுர் சந்து மற்றும் சோனம் பாஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். பாகி 4 திரைப்படம் முதல் நாளில் ₹9-11 கோடி வசூல் செய்யும் என்று திரைப்படத் துறை கண்காணித்துள்ளது. பகல் நண்பகல் 12 மணி நிலவரப்படி, இத்திரைப்படம் ₹1.9 கோடியை வசூலித்துள்ளது. இந்த படத்தை ஓடிடி உரிமைகளை அமேசான் பிரைம் வாங்கியுள்ளதால், இந்த திரைப்படம் விரைவில் OTT தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X