»   »  திகார் ரொம்ப நல்ல ஜெயிலு, அங்கிருந்த போலீஸ் என் ரசிகர்கள்: பவர்ஸ்டார்- பிளாஷ்பேக்

திகார் ரொம்ப நல்ல ஜெயிலு, அங்கிருந்த போலீஸ் என் ரசிகர்கள்: பவர்ஸ்டார்- பிளாஷ்பேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த முறை திகார் சிறைக்கு சென்று வந்ததையே பெருமையாக கூறி வந்த பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் அங்கு செல்கிறார்.

ஏற்கனவே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ரூ.10 கோடி மோசடி வழக்கில் பவர்ஸ்டார் டெல்லி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை திகார் சிறையில் அடைக்கப் போகிறார்களாம்.

முன்பு திகாரில் இருந்தது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பவர் ஸ்டார் கூறியதை யாரும் மறந்திருக்க முடியாது. மறந்திருந்தால் இதை படிங்க.

திகார்

திகார்

திகார் சிறை ரொம்ப நல்ல சிறை. அங்கு சென்றபோது புது இடமாக உள்ளதே என்று பயந்தேன். என்னை அடைத்த அறையில் 2 பேர் இருந்தார்கள். மறுநாள் காலை எழுந்தபோது தான் அவர்கள் இருவரும் கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகள் என்பது தெரிந்து அதிர்ந்தேன். நல்ல வேளை என்னை கற்பழிக்கவில்லை என்று நினைத்தேன்.

போலீசார்

போலீசார்

திகாரில் இருந்த 1,500 தமிழக போலீசாரும் என் ரசிகர்கள். என்ன பவர் இந்த பக்கம், ஏதாச்சும் ஷூட்டிங்கா என்று கேட்டார்கள். ஜாமீன் கிடைக்கும் வரை இங்கு தானே இருக்கணும்னு நினைத்து இல்லை சார் சும்மா அப்படியே வந்தேன் என்றேன்.

படம்

படம்

திகாரில் நடப்பவற்றை எல்லாம் பார்த்து படம் எடுங்க பவர் என்று போலீசார் தெரிவித்தனர். நானும் சரி என்றேன். திகாரில் எனக்கு அருமையான நண்பர் ஒருவர் கிடைத்தார். அவர் தான் சிறையில் இருந்த பெரும் தலைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

அனுபவம்

அனுபவம்

யாருக்கும் திகார் அனுபவம் வேண்டாம். ஆனால் நான் அதையும் பார்த்துவிட்டேன். திகாரிலேயே சமாளித்ததை பார்த்தால் என்னால் எங்கும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது என்று பவர் தெரிவித்தார்.

English summary
Powerstar Srinivasan is arrested in cheating case today. He earlier said that Tihar jail was a good jail and the TN police over there are his fans.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil