புது வீட்டில் பால் காய்ச்சிய ஜிபி முத்து..முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்!

சென்னை : டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து புது வீட்டில் பால் காய்ச்சி குடியேறி உள்ளார்.

டிக் டாக் ஆஃப் பலரை பெரிய அளவில் பிரபலமாக்கியது அப்படி பிரபலமானவர் தான் ஜிபி முத்து. இவர் 2020ம் ஆண்டு ரௌடி பேபி சூர்யாவுடன் இணைந்து பல பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்த வீடியோவிற்கு கண்டபடி விமர்சனம் வந்தாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு தற்போது பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளார்.

ஜி பி முத்து

ஜி பி முத்து

ஏலே...செத்தப்பயலே..நாரப்பயலே...இதுதான் ஜிபி முத்துவின் டிரேடு மார்க் வசனம். வாசகர்கள் என்னத்தான் திட்டினாலும், இந்த வசனத்தை பேசி அவர்களை சிரிக்க வைத்துவிடுவார்கள். இவரின் வெகுளித்தனமான பேச்சு, கள்ளம் கபடம் இல்லாத இவரின் குணம் அனைவருக்கும் பிடித்துப்போக, அனைவரும் இவருக்கு ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். ஜி பி முத்துவை தமிழ்நாட்டில் தெரியாதவர்களே இருக்க முடியாது என்று மாறிவிட்டது.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வியக்க வைத்தார். அதோடு, முதல் நாளே "ஆதாமா" அது யாரு என வெகுளித்தனமாக பேசி பார்த்தவர்களை ரசிக்க வைத்தார். இதையடுத்து ரசிகர்கள் இவருக்கு என்று தனி ஆர்மிகளை தொடங்கி இணையத்தை தெறிக்கவிட்டனர்.

பணம் முக்கியம் இல்லை

பணம் முக்கியம் இல்லை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே கேப்டன் டாஸ்கில் சிறப்பாக விளையாடி வீட்டின் முதல் கேப்டன் ஆனார். இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து நிச்சயம் டைட்டிலை பெறுவார் என்று எதிர்பார்த்த நேரத்தில், தனது மகன் விஷ்ணுவை பார்க்க வேண்டும் என்றும் அடம்பிடித்தார். பிக் பாஸ் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. புகழ்,காசு, பணத்தை விட தன் மகன் தான் முக்கியம் என்று நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

புதிய வீடு

புதிய வீடு

இந்நிலையில், ஜிபி முத்து புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு மிகவும் எளிமையாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பால் காய்ச்சியுள்ளார். எலக்ட்ரிக் ஸ்டவ்வில் பால் காய்ச்சி ஹாலில் பூஜை போடப்பட்டுள்ளது. அதன்பின் காய்ச்சிய பாலை மகன், மகள்களுக்கு கொடுத்து இனிப்பு ஊட்டி உள்ளார்.. ஜிபி முத்துவின் வீடானது 2 ரூம், ஒரு கிச்சன் மற்றும் ஒரு ஹால் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X