For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  டிக் டாக்கில் டிரெண்டாகும் சில்க் ஸ்மிதா.. வைரலாகும் வீடியோக்கள்.. யார் இந்த வெர்ஷன் 2.0?

  |

  சென்னை: சில்க் ஸ்மிதா மீது இருக்கும் கிரேஸ் தற்போது அதே அளவில் இருப்பது தான் அவர் சினிமாவில் செய்துவிட்டு போன மேஜிக்கே.

  கருப்பா அழகா, கவர்ச்சியான கண்களுடன் ஒரு பெண்ணை பார்த்தால், சட்டென நம் மனதுக்கு சில்க் வந்துவிடுவார்.

  அச்சு அசலாக சில்க் ஸ்மிதாவை போல இருக்கும் இளம்பெண் ஒருவரின் வீடியோ டிக்டாக்கில் வைரலாகி வருகிறது.

  நமது வெப்சைட்டிலேயே கூட அவரை பற்றிய செய்திகளை கடந்த ஆண்டு போட்டிருக்கிறோம். தற்போது மீண்டும் வைரலாகி வரும் அவர் குறித்த சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

  மீண்டும் மன்மதராசா பாட்டுக்கு ஆட்டம் போட்டு பட்டைய கிளப்பிய சாயா சிங்.. அள்ளும் லைக்ஸ்!மீண்டும் மன்மதராசா பாட்டுக்கு ஆட்டம் போட்டு பட்டைய கிளப்பிய சாயா சிங்.. அள்ளும் லைக்ஸ்!

  கவர்ச்சி கன்னி

  கவர்ச்சி கன்னி

  80, 90களில் சினிமாவில் கவர்ச்சி குத்தாட்ட பாடல்கள் இருந்தே ஆக வேண்டும் என்ற நிலையை ஒரு டச்சப் ஆர்டிஸ்டாக வந்த விஜயலட்சுமியால் சாதிக்க முடிந்தது என்பதை தமிழ் சினிமா இன்றும் வரலாறாகத் தான் பார்க்கிறது. அப்பாக்களின் கவர்ச்சிக் கன்னியாக இருந்த ஒரு பெண் இன்றைக்கும் பேசப்படுவது தான் அவர் செய்த சாதனை.

  விசித்திரமான வாழ்க்கை

  விசித்திரமான வாழ்க்கை

  வெறும் கவர்ச்சி கன்னியாக மட்டுமே சில்க் ஸ்மிதாவை சினிமா ரசிகர்கள் காணவில்லை. அதுதான் அவரது வளர்ச்சிக்கும், இன்றளவும் நீடித்து நிற்கும் புகழுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. அவரது விசித்திரமான வாழ்க்கையும் வேதனையான தற்கொலையும் தான் இன்னமும் பேசு பொருளாக அவர் இருக்க காரணம்.

  தேசிய விருது

  தேசிய விருது

  வண்டிச்சக்கரம் படத்தில் சாராயம் விற்கும் ‘சில்க்' கதாபாத்திரத்தில் அறிமுகமான விஜயலட்சுமி, அதன் பின்னர் சில்க் ஸ்மிதாவாகவே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் 17 ஆண்டுகளில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தார். வித்யா பாலன் நடிப்பில் Dirty Picture என்ற சில்க்கின் பயோபிக் வெளியாகி தேசிய விருதை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

  அச்சு அசலாக

  அச்சு அசலாக

  அச்சு அசல் சில்க் ஸ்மிதாவை போலவே இருக்கும் இளம்பெண் ஒருவர் கடந்த ஒரு வருடமாக டிக்டாக்கில் அசத்தி வருகிறார். இவர் குறித்த செய்திகள் முன்னதாகவே நம் வெப்சைட்டில் வெளியாகி உள்ள நிலையில், தற்போது மீண்டும் இவரது டிக்டாக் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

  கொஞ்சம் கேப்

  கொஞ்சம் கேப்

  டிக்டாக்கில் சில்க் ஸ்மிதாவின் பாடலுக்கும், வசனத்திற்கும் ஏற்றபடி அதே போல வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர் குறித்த விபரங்களை மீடியாக்கள் தெரிந்து கொள்ள துடிதுடியாய் துடித்தன. ஆனால், யாரிடமும் சிக்க இவர் விரும்பவில்லை. இந்நிலையில், கொஞ்ச நாளாக டிக்டாக்குக்கு கேப் விட்ட இவர், மீண்டும் தற்போது வீடியோக்களை வெளியிட தொடங்கி இருக்கிறார்.

  எந்த ஊர்?

  எந்த ஊர்?

  VJ Virtue என்கிற டிக் டாக் ஐடியில் தனது பதிவுகளை ஏற்றி வரும் இந்த பெண் சென்னையை சேர்ந்தவர் என்பது ரசிகர் ஒருவர், கேட்ட கேள்விக்கு பதிலாக அவர் அளித்த கமெண்ட் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், சமீபத்தில் இவருக்கு திருமணம் ஆகி உள்ள செய்தியும், கணவருடன் இருக்கும் வீடியோக்களும் டிக்டாக்கில் வைரலாகி வருகிறது.

  என்ன பெயர்

  என்ன பெயர்

  VJ Virtue என்ற ஐடியில் வீடியோக்களை வெளியிட்டு வரும் இந்த சில்க் ஸ்மிதாவின் மாதிரியின் பெயர் விஷ்ணு அல்லது விஷ்ணுப்பிரியாவாக இருக்கலாம் என தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவரது நெருங்கிய தோழி ஒருவர் ஹாய் விஷ்ணு என்னை ஞாபகம் இருக்கா? என கமெண்ட் செய்துள்ளார். ஆனால், அவருக்கு இவர், ரிப்ளை ஏதும் செய்யவில்லை.

  சில்க் ஸ்மிதாவின் புகழ்

  சில்க் ஸ்மிதாவின் புகழ்

  இந்திய சினிமா ரசிகர்கள் இருக்கும் வரை நடிகை சில்க் ஸ்மிதாவின் புகழ் எப்போதுமே மறையாது. கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்து, தனது விடா முயற்சியாலும், பல பிரச்சனைகள், தொல்லைகளை சந்தித்து, சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு நிகராக கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் கெஞ்சும் அளவுக்கு வளர்ந்து பின்னர், குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்துக் கொண்ட சில்க் ஸ்மிதாவின் புகழ் அலை கொஞ்சம் அவரை போலவே இருக்கும் இந்த பெண்ணுக்கும் விழுந்து வருகிறது.

  English summary
  Silk Smitha look like girl videos trending in TikTok. Recently married girl once again come back to the Chinese app and make it as viral one.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X