»   »  காலம் இளையராஜாவையும் என்னையும் சேர்த்து வைக்கும்! - எஸ்பிபி

காலம் இளையராஜாவையும் என்னையும் சேர்த்து வைக்கும்! - எஸ்பிபி

Posted By:
Subscribe to Oneindia Tamil

காலம் இளையராஜாவையும் என்னையும் சேர்த்து வைக்கும் என்று பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

தனது பாடல்களை மேடைகளில் பாடுவதற்கு முன் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என இளையராஜா சார்பில் எஸ்பிபி உள்ளிட்ட பாடகர்களுக்கு சில நாட்களுக்கு முன் கடிதம் அனுப்பப்பட்டது.

நியாயம் யார் பக்கம்?

நியாயம் யார் பக்கம்?

வழக்கமாக அனுப்பப்படும் ஒரு சட்ட ரீதியான கடிதத்தை, எஸ்பிபி பொது வெளியில் கொண்டு, பெரிய பிரச்சினையாக மாற்றினார். தன்னுடைய ஈகோவை விட்டுத் தர முடியாமல் அவர் ரசிகர்களுக்கிடையே மோதலாக மாற்றியதை ஓரிரு நாட்களுக்குப் பிறகு ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். எஸ்பிபி தனக்கு காப்பி ரைட் சட்டங்கள் தெரியாது எனக் கூறினார். ஆனால் இதே எஸ்பிபிதான் தங்களுக்கான காப்பிரைட் தொகைக்காக உண்ணாவிரதம் இருந்தார் என்பதை மீடியா வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.

இளையராஜாவுக்கு ஆதரவு

இளையராஜாவுக்கு ஆதரவு

இந்த விவகாரத்தில் இளையராஜா பக்கம் நூறு சதவீத நியாயம் இருப்பதை திரையுலகினர் புரிந்து, அவரை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

எஸ்பிபியிடம் கேள்வி

எஸ்பிபியிடம் கேள்வி

இந்த நிலையில்தான் மீண்டும் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என சமீபத்தில் அமெரிக்காவில் கச்சேரி நடத்தி வரும் எஸ்பிபியிடம் கேட்டுள்ளனர்.

நாங்கள் நண்பர்கள்

நாங்கள் நண்பர்கள்

இதற்கு பதிலளித்த அவர், "இளையராஜாவும், நானும் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே நண்பர்கள். இப்போது இளையராஜாவின் பாடல்களை பாட முடியாததால் மனதளவில் வருத்தப்பட்டேன்.

காப்பிரைட் பத்தி தெரியாது

காப்பிரைட் பத்தி தெரியாது

எனக்கு இந்த காப்புரிமை பிரச்சனை குறித்த எதுவுமே தெரியாது. அவர் அனுப்பிய நோட்டீஸ் மூலமே இவ்வாறு சட்டம் உள்ளதை அறிந்தேன். இதுபோன்று சட்டம் இருப்பது முன்பே தெரிந்திருந்தால், இளையராஜாவிடம்தான் அனுமதி கேட்டிருப்பேன். இளையராஜா இதுபோன்று காப்புரிமை பெற்றுள்ளார் என்று எனக்குத் தெரியாது.

காலம் தீர்த்து வைக்கும்

காலம் தீர்த்து வைக்கும்

எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. அதுவே தற்போது, இளையராஜாவுடன் பேசவிடாமல் தடுக்கிறது. இந்தப் பிரச்சினையை காலம் தீர்த்து வைக்கும் என நம்புகிறேன்," என்றார்.

English summary
Singer SPB says that time would sort out issues between him and Ilaiyaraaja.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil