பீஸ்ட் தோல்வி படமா... புள்ளிவிபரங்களை புட்டுபுட்டு வைத்த திருப்பூர் சுப்ரமணியம்
சென்னை : விஜய் நடித்த பீஸ்ட் படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த படமாக இருந்தாலும் சமீப காலமாக பீஸ்ட் தோல்வி படம் என்றொரு பேச்சு பரவலாக ஓடிக்கின்றது.
Recommended Video
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை வைத்து நெல்சனை பலரும் கடுமையாக திட்டி தீர்த்து வந்தனர்.
இதனால் பீஸ்ட் வெற்றி படமா, தோல்வி படமா என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இதற்கு வசூல் ரீதியாக பல உதாரணங்கள் சொல்லப்பட்டு விட்டன. விஜய் ரசிகர்களும் பீஸ்ட் படத்தை வெற்றி படமாக தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பீஸ்ட் உண்மையான வசூல் எவ்வளவு
ஆனால் பீஸ்ட் படத்தின் வசூல் கணக்கு உண்மை தானா என பலருக்கும் சந்தேகம் உள்ளது. அதற்கு காரணம் பீஸ்ட் 200 கோடி வசூலை கடந்தது என சிலரும், 175 கோடி வசூல் செய்தது என சிலரும் கூறுவது தான். இதனால் விஜய் ரசிகர்களே அடித்து பேச முடியாமல் சற்று குழப்பத்தில் தான் இருக்கிறார்கள். இதில் எது உண்மையான வசூல் என யார் சொல்வார்கள் என அனைவரும் காத்திருக்கிறார்கள்.

பீஸ்ட் தோல்வி படமா...யார் சொன்னது
இந்நிலையில் பிரபல சினிமா விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியன் பீஸ்ட் படம் பற்றி ஓப்பனாக புள்ளிவிபரங்களுடன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், மாஸ்டர் படம் வசூலித்ததில் 85 - 90 சதவீதம் வசூலை பீஸ்ட் படமும் பெற்றுள்ளது. ஆனால் மாஸ்டர் படத்தை வெற்றி படமாக கொண்டாடுபவர்கள், பீஸ்ட் சரியாக போகவில்லை, தோல்வி படம் என எதை வைத்து சொல்கிறார்கள் என எனக்கு புரியவில்லை.

புட்டுபுட்டு வைத்த திருப்பூர் சுப்ரமணியன்
வலிமை படத்திற்கும் விஸ்வாசம் படத்திற்கும் 10 சதவீதம் தான் வசூலில் வித்தியாசம். ஆனால் விஸ்வாசம் படத்தை சூப்பர் ஹிட் என்கிறார்கள். வலிமை படம் சுமாராக தான் போனது என்கிறார்கள். அது எப்படி என தெரியவில்லை. இன்று ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள் அதிகரிக்க அதிகரிக்க என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என அவர்கள் இஷ்டத்திற்கு எழுதுகிறார்கள் என திருப்பூர் சுப்ரமணியன் பளீச்சென நெற்றியில் அடித்தது போல் தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் வசூல் எனக்கு தெரியும்
பீஸ்ட் படம் வெற்றி படம் தான். அது எத்தனை கோடிகளை வசூல் செய்தது என்பது படத்தின் விநியோகஸ்தரான தனக்கு தான் தெரியும் என உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே பல பேட்டிகளில் பீஸ்ட் வசூல் பற்றி கூறி உள்ளார். இருந்தாலும் அதையும் பலர் ட்ரோல் செய்ததுடன் பல சந்தேகங்களை கிளப்பி இருந்தனர்.

பீஸ்ட் சர்ச்சைக்கு இதுதான் காரணமா
பீஸ்ட் படம் ரிலீசாகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டாலும், சமீபத்தில் விக்ரம் படம் விஜய்யின் பீஸ்ட் மற்றும் மாஸ்டர் படங்களின் வசூலை சாதனையை முறியடித்திருப்பதாக செய்திகள் வெளியானதால், பீஸ்ட் படத்தின் உண்மையான வசூல் பற்றிய சர்ச்சைகளும், சந்தேகங்களும் மீண்டும் சோஷியல் மீடியாவில் தலைதூக்கி உள்ளது. இதனால் மீண்டும் #Beast ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











