»   »  லிங்கா பிரச்சினை தீர்ந்தது: ராக்லைன் வெங்கடேஷுக்கு உதவிய திருப்பூர் சுப்பிரமணியன்!

லிங்கா பிரச்சினை தீர்ந்தது: ராக்லைன் வெங்கடேஷுக்கு உதவிய திருப்பூர் சுப்பிரமணியன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தரவேண்டிய தொகையில் ஒரு பகுதியை திருப்பூர் சுப்பிரமணியன் ஏற்றதால் லிங்கா பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடாக ரூ 12.5 கோடியை ரஜினியும் ராக்லைன் வெங்கடேஷும் தர சில மாதங்களுக்கு முன் சம்மதித்திருந்தனர்.


அதில் ரஜினிகாந்த் மட்டும் தனது பங்காக ரூ 6.50 கோடியை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு மற்றும் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கொடுத்து உரிய முறையில் பிரித்துக் கொடுக்கச் சொன்னார்.


Tiruppur Subramaniyam's timely help to solve Lingaa issue

அடுத்து ராக்லைன் வெங்கடேஷ் தனது பங்காக ரூ 6 கோடியை பின்னர் தருவதாகக் கூறியிருந்தார். ஆனால் தனிப்பட்ட சில காரணங்களால் அவர் பணம் தர தாமதமானது.


இந்த நிலையில் லிங்கா பிரச்சினைக்கு தீர்வு காணும் கூட்டம் சமீபத்தில் கூடியது. இதில் ராக்லைன் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, துணைத் தலைவர் கதிரேசன், செயலாளர்கள் டி சிவா, ராதாகிருஷ்ணன், வேந்தர் மூவீஸ் எஸ் மதன், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், பிலிம்சேம்பர் நிர்வாகி காட்ரகட்ட பிரசாத், விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்த அருள்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ரூ 4.75 கோடியைக் கொடுத்தார். மீதிப் பணத்தை தன்னால் தர முடியாத நிலையில் இருப்பதாகக் கூறினார்.


இதைத் தொடர்ந்து மீதிப் பணமான ரூ 1.25 கோடியை தானே தர முன்வந்தார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன்.


"ரஜினியை வைத்து பல கோடியைச் சம்பாதித்தவன் நான். இன்று அவருக்கு ஒரு பிரச்சினை வந்து முடியாமல் இழுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க விரும்பவில்லை. ரஜினி சாருக்காக அந்த 1.25 கோடி ரூபாயை நானே தருகிறேன்," என்று அவர் அறிவித்தபோது, அரங்கிலிருந்த மொத்தப் பேரும் கைத் தட்டினர். திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்த அறிவிப்பு ராக்லைன் வெங்கடேஷை நெகிழ வைத்தது.


இத்தனைக்கும் லிங்கா படத்தின் விநியோக உரிமையை திருப்பூர் சுப்பிரமணியம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
With the help of Distributor Tiruppur Subramanyam, Lingaa issue has been solved today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil