»   »  உரிய இடத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட வேண்டும்: வைரமுத்து வேண்டுகோள்

உரிய இடத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட வேண்டும்: வைரமுத்து வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதைகள் புத்தகத்தின் 12ம் பதிப்பு அறிமுக விழா டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

தமிழ்ச் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையேற்ற இந்த நிகழ்ச்சியில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறுகதைகளை ஆய்வு செய்து பேசினார்.

Tiruvalluvar statue should be unveil in proper location

கவிஞர் வைரமுத்து ஏற்புரையாற்றி பேசிகையில், திருவள்ளுவர் ஒரு இனத்துக்கோ, மதத்துக்கோ, சாதிக்கோ சொந்தமானவர் அல்லர். அவர் ஒட்டுமொத்த மனித குலத்துக்கே உரிமையானவர். இந்தியாவின் அறிவு வளம் என்பது திருவள்ளுவரையும் சேர்த்தால்தான் பூரணமாகும். எனவே உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் அரசுகள் திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் நிறுவ ஆவன செய்ய வேண்டும் என்றார்.

Tiruvalluvar statue should be unveil in proper location

கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ பாஜக எம்பி தருண் விஜய் முயன்றபோது, திருவள்ளுவர் சிலையை அங்கு நிறுவக் கூடாது என்று சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


English summary
Tiruvalluvar statue should be unveil in proper location at Uttarakhand requsted poet Vairamuthu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil